JULY 30, நாமக்கல் மாவட்டம், திருச்செங்கோட்டில் தனியார் மகளிர் கல்லூரி இயங்கி வருகிறது. இந்த கல்லூரியில் வெடிகுண்டு வைத்திருப்ப தாகவும். இந்த குண்டு விரைவில் வெடிக்கும் என்றும் கடந்த 7ம் தேதி போனில் மிரட்டல் வந்தது.
போனில் பேசிய மர்ம ஆசாமி இந்த விவரத்தை கூறி விட்டு திடீரென இணைப்பை துண்டித்து விட்டார். இதையடுத்து கல்லூரி நிர்வாகத்தினர் திருச்செங்கோடு புறநகர் போலீசில் புகார் செய்தனர். புகாரின்பேரில் போலீசார் விரைந்து சென்று விசாரணை நடத்தினர். இதில் வெடிகுண்டு மிரட்டல் வெறும் புரளி என்று தெரியவந்தது.
இதையடுத்து பிஎஸ்என்எல் அலுவலகத்தை தொடர்பு கொண்டு சம் பந்தப்பட்ட மிரட்டல் போன் எங் கிருந்து வந்தது? என கண்டுபிடிக்க முயற்சித்தனர். இதில், திருவாரூர் சாட்டைக்குடி வேதபுரீஸ்வரர் கோயிலில் அர்ச்சகராக பணி யாற்றும் ராமநாதன் (28) என்பவர் தான் வெடிகுண்டு மிரட்டல் விடுத்து கல்லூரிக்கு போன் செய்தவர் என தெரியவந்தது.
இதையடுத்து அர்ச்சகர் ராமநாதனை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர். விசாரணையில், பள்ளி, கல்லூரி, வணிக நிறுவனங்களுக்கு போன் செய்து வெடிகுண்டு மிரட்டல் விடுத்து, அதனால் பிறர்படும் அவதியை கண்டு ரசிப்பது தனது பொழுதுபோக்கு என்று அர்ச்சகர் ராமநாதன் தெரிவித்துள்ளார். மேலும் பெண்களிடமும் ஆபாசமாக போனில் பேசும் வழக்கம் உடையவர் என்பதும் தெரியவந்தது. இதைத் தொடர்ந்து போலீசார் மேலும் விசாரணையை முடுக்கி விட்டுள்ளனர்.
2 comments:
உண்மையான பயங்கரவாதிகள் வெளியே வருகிறார்கள்.
- DALITH MAINTHAN
எல்லா அர்ச்சகர் இடுப்பு மடிப்பையும் செக் பண்ணவேண்டும்... கரவோசை
Post a Comment