JULY 20, மு.க.அழகிரியின் நெருங்கிய நண்பர் பொட்டு சுரேஷும், திமுக மதுரை மாவட்ட செயலாளர் தளபதி மற்றும் திருமங்களம் யூனியன் சேர்மன் கொடி சந்திரசேகர், திமுக முக்கிய பிரமுகர் தாய் முகாம்பிகை சேதுராமன் ஆகிய நான்கு பேர் 10 மணி நேர விசாரணைக்கு பிறகு இன்று (19.7.2011) இரவு 8.30 மணிக்கு கைது செய்யப்பட்டனர்.
கைது செய்யப்பட்ட இவர்கள், ஜே.எம் -1 நீதிபதி முத்துக்குமரன் வீட்டில் ஆஜர் படுத்தப்பட்டனர். மதுரை திருமங்களத்தை சேர்ந்த சிவனாண்டி அவரது மனைவி பாப்பா ஆகியோர் மதுரை எஸ். பி. அஸ்ராஹாக்கியிடம் கொடுத்த புகாரில், தங்களது 5 ஏக்கர் நிலத்தை இந்த 4 பேரும் மிரட்டி வாங்கியதாக தெரிவித்திருந்தனர்.
இந்தப்புகாரின் அடிப்படையில் நான்கு பேருக்கும் சம்மன் அனுப்பி யிருந்தார் எஸ்.பி. இன்று காலை நான்கு பேரும் எஸ்.பி. அலுவலகத்தில் ஆஜார் ஆனார்கள். இவர்களிடம் தொடர்ந்து 10மணி நேரமாக விசாரணை நடைபெற்று வந்தது. எஸ்.பி.ஐ பணி செய்ய விடாமல் தடுத்ததாகவும் இவர்கள் மீது வழக்கு பதிவு செய்தனர். விசாரணை
நடைபெற்றுக்கொண்டிந்த நிலையில் இவர்கள் மீது மேலும் பல புகார்கள் குவிந்த வணணம் இருந்தது. இதையடுத்து 4 பேரும் கைது செய்யப்பட்டனர். இதனால் மதுரையில் பரபரப்பு நிலவுகிறது. பதட்டம் நிலவுவதால் மதுரையில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.
Subscribe to:
Post Comments (Atom)
2 comments:
நான் மதுரையில் தான் இருக்கிறேன் பதற்றம் பரபரப்பு அதுவும் மதுரையில் . நல்ல காமெடி தான்.
வணக்கம் MANASAALI , உங்கள் கருத்துக்கள் உற்ச்சாகம் அளிக்கிறது. நன்றி மீண்டும் வருக!
Post a Comment