JULY 15, தெலுங்கானா தனி மாநிலம் கோரி, ஐதராபாத் உஸ்மானியா பல்கலைக்கழக மாணவர்கள் காலவரையற்ற உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டனர்.
நான்காவது நாளாக இன்று உண்ணாவிரதம் இருந்தனர். ஆனால், 5 மாணவர்களின் உடல்நிலை மோசம் அடைந்ததால், அவர்கள் ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டனர்.
மேலும் சில மாணவர்களின் ரத்த அழுத்தத்தில் சீரற்ற தன்மை இருப்பது, டாக்டர்களின் பரிசோதனையில் தெரிய வந்தது. இதையடுத்து, மாணவர்கள் இரவு, தங்கள் உண்ணாவிரதத்தை வாபஸ் பெற்றனர். தெலுங்கானா ராஷ்டிர சமிதி எம்.எல்.ஏ. எடாலா ராஜேந்திரா, சஸ்பெண்டு செய்யப்பட்ட தெலுங்கு தேசம் எம்.எல்.ஏ. நாகம் ஜனார்த்தன ரெட்டி ஆகியோர் அளித்த பழச்சாற்றை அருந்தி அவர்கள் உண்ணாவிரதத்தை முடித்துக் கொண்டனர்.
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment