JULY 15, பாலக்காடு மாவட்டத்தில் கட்நத 1-ந்தேதி முதல் 11-ந்தேதி வரை காய்ச்சலால் பாதிக்கப்பட்ட 10 ஆயிரத்து 60 பேர் பல்வேறு ஆஸ்பத்திரிகளில் சிகிச்சை பெற்று சென்றனர். இவர்களில் 140 போலீசாருக்கு பன்றிக்காய்ச்சல் அறிகுறி உள்ளதாக மாவட்ட உதவி மருத்துவ அதிகாரி பிந்து தோமஸ் தெரிவித்துள்ளார்.
’’பாலக்காடு மாவட்டத்தில் டைபாய்டு, டெங்கு காய்ச்சல் வேகமாக பரவி வருகிறது. மாவட்டத்தில் பல ஆஸ்பத்திரிகளில் காய்ச்சல் பாதித்தவர்களை பரிசோதனை செய்ததில் 5 பேர் பன்றிக்காய்ச்சலாலும், 7 பேர் டெங்கு காய்ச்சலாலும் பாதிக்கப்பட்டுள்ளது தெரிய வந்துள்ளது.
பாலக்காடு முட்டிக்குளங்கரை போலீஸ் முகாமில் உள்ள போலீஸ்காரர்கள் காய்ச்சலால் அவதிப்படுவதாக மருத்துவத்துறைக்கு தகவல் வந்தது. அவர்களை பரிசோதித்தபோது 140 பேருக்கு பன்றிக் காய்ச்சல் அறிகுறி இருப்பது தெரியவந்தது. காய்ச்சல் பாதித்த 140 போலீசாருக்கும் தீவிர சிகிச்சை அளிக்கப்படுகிறது.
தொண்டை வலி, சளி, வாந்தி, வயிற்றுப்போக்கு ஆகியவை பன்றிக் காய்ச்சலின் அறிகுறியாகும். நோய் தாக்கியவர்கள் வெளியில் நடமாட வேண்டாம். வீட்டில் இருந்தபடியே சிகிச்சை பெற வேண்டும். வீட்டிலும் வாயை துணியால் மூடியபடி இருப்பது நல்லது. பன்றிக்காய்ச்சல் குணப்படுத்தக் கூடியது. உரிய நேரத்தில் சிகிச்சை பெற்றால் நோய் குணமாகும்’’என்று கூறினார்.
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment