புதுடெல்லி, ஜுன். 9- ஊழல், கறுப்பு பணத்தை ஒழிக்க கோரி யோகா குரு ராம்தேவ் ஹரித்துவாரில் உள்ள தன் ஆசிரமத்தில் உண்ணாவிரதம் இருந்து வருகிறார்.
இன்று (வியாழன்) அவரது உண்ணாவிரதம் 6-வது நாளாக நீடித்தது. அவரது உடல் நிலை பாதிக்கப்பட்டுள்ளதாக டாக்டர்கள் அறிவித்துள்ளனர்.
ராம்தேவ் குறித்து மத்திய அரசு பல்வேறு நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ளது. அதன் ஒரு பகுதியாக ராம்தேவின் சொத்துக்கள், வருமானம் குறித்து விசாரணை நடத்தி தகவல்கள் சேகரிக்கப்பட்டு வருகிறது.
ராம்தேவுக்கு 5 ஆயிரம் கோடி ரூபாய்க்கு மேல் சொத்துக்கள் இருப்பதாக முதல் கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது. குட்டித்தீவு ஒன்றை சொந்தமாக வைத்திருக்கும் அவர் மூலிகை மருந்து விற்பனை மூலம் கோடி, கோடியாக சம்பாதித்து வருகிறார்.
ஹரித்துவாரில் உள்ள பதாஞ்சலி யோகா பீடத்தின் ஒரு பகுதியில் ராம்தேவ் வழங்கும் ஆலோசனை பேரில் தான் இந்த ஆயுர்வேத மூலிகை மருந்துகள் தயாரிக்கப்படுகின்றன. இந்த மருந்துகளில் கலப்படம் இருப்பதாக குற்றச்சாட்டு எழுந்தது.
தற்போது போலி மூலிகை மருந்து தயாரிக்கப்பட்டதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. சில வகை ஆயுர்வேத மூலிகை மருந்துகள் தயாரிக்க மத்திய அரசிடம் அனுமதி பெற வேண்டும். ஆனால் ராம்தேவ் முறைப்படி அனுமதி பெறவில்லை என்று தெரிகிறது. அது போல மருந்துகளை வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்யவும் அவர் உரிய வகையில் அனுமதி பெறவில்லை என்று கூறப்படுகிறது.
ராம்தேவ் ஆசிரமத்துடன் சில ஆயுர்வேத மருந்து தயாரிப்பு நிறுவனங்கள் தொடர்பு வைத்துள்ளன. மருந்து தயாரிப்பு, கலவை, விற்பனை, ஏற்றுமதி போன்ற எல்லா விஷயங்களிலும் முறைகேடுகள் நடந்துள்ளதாக சந்தேகிக்கப்படுகிறது. இதையடுத்து அமலாக்கப் பிரிவு அதிகாரிகள் ஹரித்துவார் ஆசிரமத்தில் சோதனை நடத்தி விசாரிக்க முடிவு செய்துள்ளனர்.
விரைவில் இந்த விசாரணை நடைபெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ராம்தேவின் சொத்துக்கள் குறித்து ஒரு பக்கம் விசாரணை நடந்து வரும் நிலையில் மற்றொரு பக்கம் அவர் பண முதலீடுகள் பற்றிய விசாரணையும் நடந்து வருகிறது. எனவே ராம்தேவ் சொத்துக்கள், ஆயுர்வேத மருந்து தயாரிப்புகள் குறித்து விரைவில் பல பரபரப்பான தகவல்கள் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

2 comments:
இவர்களின் ஒவ்வொரு நடவடிக்கைக்கு பின்னாலும் பழி வாங்குதல், அரசியல் ஆதாயம் என்று ஏதாவது ஒரு சுயநலம் இல்லாமல் இருக்காது. இவர்களின் எல்லா வேஷங்களும் களைந்து அவர்களை போற்றி புகழ்பாடும் அன்றாடங்காய்ச்சிகலாலேயே தூற்றப்பட்டு துரத்தப்படுவர்.
"துரத்தினால் என்ன அவருக்குதான் தனியாக ஒரு தீவே காத்திருகிறதே", என்று நீங்கள் சொல்வது என் காதில் விழுகிறது.
- NAA SAMAJ (புரியாதவன்)
என்னடா அநியாயம் இது ? ஒரு தடி அடி கலைப்புக்கே இந்த அமர்க்களம் பன்னுறாரே இந்த கார்பரேட் சுவாமி.
தற்காப்புக்காக கத்தி வச்சிருந்தாலும், அதையெல்லாம் பிடுங்கி சென்று நிராயுதபாணியாக்கி பின்னர் RSS
குண்டர்களை விட்டு கருவருத்ததே காவல் துறை அதற்கு கூட அந்த காவல் துறையை எதிர்த்து சிறுபான்மை சமுதாயம் குரல் கொடுக்க வில்லையே. இன்று வெளிப்படையாகவே ஒரு அரசின் செயலுக்கு போர் பிரகடனம் செய்திருக்கும் இந்த கார்பொரேட் சுவாமியையும் அவர் அழைத்திருக்கும RSS குண்டர்களையும், அந்த இயக்கத்தையும் என்ன செய்யப் போகிறது இந்த வகையற்ற அரசு ?
RSS ஐயும் அதன் துணை அமைப்புகளையும் நிரந்தரமாக தடை செய்ய இதுவரை அவர்கள் நடத்திய
அநியாயங்கள் போதாதா?
அசதியில் தூங்கலாம். அதற்காக ஒரேயடியாக தூங்கிவிட்டால் அதற்கு பெயர் தூக்கம் அல்ல. செத்துபோதல் என்று பெயர்.
எனவே இதுதான் தருணம். விழித்துக்கொண்டு இந்திய அரசின் இறையாண்மையையும் பொது ஜனத்தையும் பாதுகாக்க அரசு செயல்பட வேண்டும்.
- பரிதாப இந்தியன்
Post a Comment