யாழ்ப்பாணம், ஜுன். 9-ஈழத் தமிழர்களை கொன்று குவித்த இலங்கை அரசு மீது பொருளாதார தடை விதிக்க வலியுறுத்தும் தீர்மானம் தமிழக சட்ட சபையில் நேற்று நிறைவேற்றப்பட்டது.
முதல்-அமைச்சர் ஜெயலலிதாவின் இந்த நடவடிக்கை, உலகம் முழுவதும் வாழும் தமிழர்களிடம் மகிழ்ச்சியையும், நம்பிக்கையையும் ஏற்படுத்தி உள்ளது.
போரில் மிக கடுமையாக பாதிக்கப்பட்டு வாழ்வாதாரங்களை இழந்து, நிர்க்கதியாக இருக்கும் ஈழத் தமிழர்களுக்கு, இந்த தீர்மானம் ஆறுதல் அளித்துள்ளது என்று தமிழ் ஆர்வலர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.
முதல்-அமைச்சர் ஜெயலலிதாவுக்கு ஈழத் தமிழர் ஆதரவு அமைப்புகள் நன்றி தெரிவித்துள்ளன. இலங்கையில் உள்ள தமிழ் தேசிய கூட்டமைப்பும் நன்றி தெரிவித்துள்ளது.
இலங்கையில் உள்ள தமிழ் மக்களாகிய நாம் எமது சுயநிர்ணய உரிமையுடன் வாழ வேண்டும் என்பதற்காக 6 தசாப்தங்களுக்கும் மேலாக போராடி வருகிறோம். இலங்கை அரசு எமக்கு பல தடவைகள் வழங்கிய வாக்குறுதிகளை நிறைவேற்றவில்லை மாறாகா எமது உரிமைகளை நசுக்கிக் கொண்டே வருகின்றது.

கடந்த 2009-ம் ஆண்டு வன்னியில் இடம் பெற்ற உக்கிரமான யுத்தத்தில் பல்லாயிரக்கணக்கான மக்கள் கொல்லப்பட்டதுடன் பல லட்சம் பேர் இடம் பெயர்ந்தார்கள். அவர்களின் வாழ்விடங்கள் தரை மட்டமாகி சொத்துக்கள் அழிக்கப்பட்ட நிலையில் 2 வருடங்கள் கடந்தும் இன்னுமே அந்த மக்கள் இருப்பிடங்கள் இன்றி தங்களது மண்ணில் சுதந்திரமாக வாழ முடியாமல் இருப்பதைக் காணலாம்.
விடுதலைப்புலிகளை முற்றாக அழித்து விட்டதாக இலங்கை அரசு அறிவித்ததன் பிற்பாடும் தொடர்ந்து ராணுவ ஆக்கிரமிப்புகள் தமிழர் பகுதிகளில் தொடர்வதுடன், தமிழ் மக்களின் உரிமைகள் தொடர்ச்சியாக பறிபோய்க் கொண்டே தான் இருக்கின்றன.
இந்த நேரத்தில் ஐ.நா. சபையும் தமிழ் மக்களின் உரிமைகளை உறுதிப்படுத்தும்படி கோரி அறிக்கை விட்டுள்ளது. இந்த அறிக்கையையும் தமிழ் தேசிய கூட்டமைப்பு வரவேற்றுள்ளது.
அத்துடன் தற்போது தமிழக சட்டசபையில் முதல் அமைச்சர் ஜெயலலிதாவினால் முன்மொழியப்பட்டு நிறைவேற்றப்பட்ட `இலங்கை மீது பொருளாதாரத் தடை விதிக்க வேண்டும்' என்ற தீர்மானத்தையும் தமிழ் தேசிய கூட்டமைப்பு வரவேற்பதுடன் முதல்-அமைச்சர் ஜெயலலிதாவுக்கு நன்றியையும் தெரிவித்துக் கொள்கிறேன்.
மேலும் முதல்-அமைச்சர் ஜெயலலிதா, தமிழக மக்களும் இலங்கைத் தமிழ் மக்களுக்கு ஒரு நிரந்தரத் தீர்வைப் பெற்றுத்தர தொடர்ந்து பாடுபட வேண்டும் என கேட்டுக் கொள்கிறோம். இவ்வாறு அரியநேத்திரன் எம்.பி. கூறினார்.

No comments:
Post a Comment