Jun 22, 2011

இலவசமாக வந்த இளமை ஊஞ்சல் ஆடியது!

ம்..சொல்லுடா சோம்பலாய் கைப்பேசியை காதுக்குகொடுத்தான் கதிர். " டே கதிரு,  நம்ம கோவாலு சூப்பரா ஒரு கிளிய சுட்டுகிட்டு வந்திருக்கான்  "டா',  டென்னிஸ் மேட்ச்ல  ..பாக்குறியா " எதிர்முனையில் பீட்டர் குரல்கேட்டதும் சுறுசுறுப்பானான் கதிர் .

" டென்னிஸ் மேட்ச்சா அப்ப ரெண்டுன்னு சொல்லு" , என்ற கதிருக்கு..." ஆசையப்பாரு ஒப்போசிட்ல ஆடினது அவன் ஆளாம்,  அதப்பாக்க போனப்பதான் இது செல் போன்ல  சிக்கியிருக்கு" , ரொம்ப பொறுப்பாய் விளக்கினான் பீட்டர் .

" சரிசரி அனுப்பு டா அசத்தலாஇருந்தா அப்புடியே forward பண்ணிடுவோம் நம்ம பசங்களுக்கு"  கையை ஏரோபிளேனாக்கி காற்றைக் கிழித்தபடி கூவினான் கதிர்.

ஓக்கே டா ஈவினிங் பாப்போம்,  என்றபடி கட் செய்ததும் எம் எம்எஸ் மணியடித்தது.  ஆவலாய்த்திறந்தவனுக்கு அத்தனையும் ஹேங்ஆனது . எதிர்ப்புறமிருந்து பறந்துவரும் பந்தைஅடிக்க எகிறும் கோவாலுகாதலி கண்மணி!

இந்தப்பக்கம் கண்மணின்னா அந்தப்பக்கம் ..? " அய்யோ என்தங்கை கல்யாணி " அலறியபடி கவிழ்ந்தான் கதிர்.  தன் வினை தன்னைச்சுடும் பழமொழி நினைவுக்கு வந்தது.


  ..யாழினி..

No comments: