Jun 12, 2011

இலங்கையில் நடந்தது இனப்படுகொலையே அருந்ததி ராய்!!

JUNE 13, இலங்கையில் இடம்பெற்ற இனப்படுகொலை அளவுக்கு ஒரு கொடுமையை நான் வேறெங்கும் கண்டதில்லை என மனித உரிமை ஆர்வலர் அருந்ததி ராய் தெரிவித்தார்.

சர்வதேச தமிழ் செய்தியாளர் ஒன்றியத்தின் ஏற்பாட்டில் லண்டன் சவுத்ஹோல் பகுதியில் நடைபெற்ற இச்சந்திப்பில் லண்டன் வாழ் புலம் பெயர் தமிழர்களும், சிங்கள ஊடகவியலாளர்கள் சிலரும் கலந்து கொண்டிருந்தனர் அப்போது அருந்ததிராய் இந்த கருத்தை தெரிவித்தார்.

மேலும் அவர் கூறுகையில் மருத்துவமனைகள் மீது குண்டுவீச்சு, மற்றும் குடியிருப்பு பகுதிகள் மீது குண்டு போட்டது, பள்ளி கூடங்கள் மீது குண்டுமழை பொழிந்து பள்ளி குழந்தைகளை கொன்று குவித்தார்கள்.

அதுபோல் குறுகிய திறந்த வெளி நிலப்பரப்பை போர் அற்ற பாதுகாப்பு பிரதேசமாக அறிவித்து, அப்பகுதிகளுக்குள் மக்களை வரச்சொல்லி பின் அப்பகுதிக்குள் ஏவுகணை மற்றும் கனரக ஆயுதங்கள் மூலம் தாக்குதல் மேற்கொள்ளப்பட்டது.

சர்வதேச நாடுகள் தங்களது பொருளாதார மற்றும் இராணுவ நலன்சார்ந்த விசயங்களுக்காக இலங்கையில் நடைபெற்ற கொடிய போருக்கும், இனப்படுகொலைக்கும் அனுமதியளித்தன.

இலங்கையில் நடைபெற்றதை முன்மாதிரியாக பின்பற்றி இந்தியா போன்ற மற்றைய நாடுகளும் செயற்பட வாய்ப்பை இது ஏற்படுத்தியுள்ளது எனவும் அவர் மேலும் தெரிவித்தார்.

இலங்கைத் தமிழர்களின் இன்னல்களை சொல்லிக்கொண்டு அரசியலில் தம்மை நிலைநிறுத்திக்கொண்ட தமிழக தலைவர்களை தான் நன்கு அறிந்துள்ளதாகவும், அதேவேளை தமிழகத்தில் உள்ள இலங்கை அகதிகள் தங்கியுள்ள முகாம்களுக்கு தான் சென்ற போது அங்கு அவர்கள் மிருகங்களைப்போல் நடாத்தப்படுவதை தான் கண்டதாகவும், இந்த விடையத்தில் தமிழக அரசியல் வாதிகள் அக்கறை கொள்ளவில்லை எனவும் அருந்ததி ராய் மேலு தெரிவித்தார்.

2 comments:

Anonymous said...

இன்று நேற்றல்ல அறுபது ஆண்டுகளுக்கு மேலாக சிங்கள கொடூங்கோல் இனவெறி அரசுகளின் தமிழரழிப்பின் உச்சம் இது. மனித நேயம் படைத்தவர்கள் எவருமே ஒப்புக் கொள்ள முடியாத இனவழிப்பை இந்த நூற்றாண்டில் நிகழ்த்திய பெருமை சிங்களத்திற்கு. உலகம் இந்த கொலைவெறியரை குற்றக் கூண்டில் நிறுத்தாது இன்னமும் வேடிக்கை பார்த்துக் கொண்டிருப்பதை எந்த மனித நேயம் படைத்தவராலும் சகிக்க முடியாது. உடனடியாகவே இந்த கொலைவெறிக் கும்பலை சட்டத்தின் முன் நிறுத்தி தண்டனை பெற்றுக் கொடுக்க உலகம் ஆவனை செய்ய வேண்டும்.

கூடல் பாலா said...

ராஜ பக்சேவும் ,கூட்டாளிகளும் உடனடியாக தண்டிக்கப்படவேண்டும் .....