Jun 12, 2011

மனித மனமும் அதன் சிந்தனை ஓட்டங்களும்!

JUNE 13, என்னிடம் இரண்டு நாய்கள் இருக்கின்றன. அவற்றுள் ஒரு நாய்க்குப் பேராசை, சுயநலம், சந்தேகம், பொறாமை பழிவாங்குவது, மற்றவர்களை அச்சுறுத்துவது போன்ற தீக்குணங்கள் அதிகம். அதற்கு நான் 'ஈவில்' (Evil ) என்று பெயர் வைத்திருந்தேன்.

இன்னொன்று அதற்கு நேர் எதிர். நன்றி, பொறுமை, நட்பு, உதவி செய்யும் மனப்பான்மை இதெல்லாம் அதனிடம் மிகுதி. நான் அதை 'குட்டி' (goodie) என்று அழைப்பேன். இரண்டும் ஒன்றுக்கு ஒன்று சளைத்ததல்ல. ஒன்றை ஒன்று ஜெயிக்கப்பார்க்கும். எப்போதும் போட்டி போட்டுக் கொண்டே இருக்கும்.

இரண்டில் "எது ஜெயிக்கும்?" நான் எது ஜெயிக்க வேண்டும் என்று விரும்புகிறேனோ அது ஜெயிக்கும்" "எப்படி? உங்களுக்கு புரியவில்லையா? "எதை நான் ஊக்குவிக்கிறேனோ, எதற்கு ஊட்டம் நான் அளித்து வளர்க்கிறேனோ, எதைப் நான் பலப்படுத்துகிறேனோ, அதைப் பொறுத்து அந்த இரண்டு நாய்களில் ஒன்று ஜெயிக்கும்"

நாய்கள் என்று நான் சொல்ல வருவது நம்முடைய மனநிலையைத்தான்.... சரி, நம்முடைய கல்வி முறை, சமகால இலக்கியங்கள், சினிமா இவை எல்லாம் 'குட்டி[Goodie]'க்குத் தீனி போடுகின்றனவா? அல்லது ஈவிலுக்கா[Evil]?

* சினிமா: ஐ.நா.சபையின் அமைப்பான உலக சுகாதார நிறுவனம் நடத்திய ஒர் ஆய்வு, இந்தியாவில் தயாராகும் படங்களில் முக்கால்வாசிப் படங்கள்- துல்லியமாகச் சொல்வதானால் 76 விழுக்காடு- புகைபிடிக்கும் காட்சிகளைக் கொண்டிருக்கின்றன என்று சொல்கிறது.

அப்படி இருக்க திருட்டு விசிடி ஒழிக்க என்று நடிகர், நடிகையர், பெரும் போராட்டம் நடத்தினார்கள். இந்த விசிடி விஷயத்தில் காட்டுகிற அக்கறையில் ஒரு பங்கை தாங்கள் எடுக்கும், நடிக்கும் திரைப்படங்களில் காட்டுவதில்லை.

இனி தமிழ்த் திரைப்படங்களில் புகைப் ப்டிக்கும் காட்சிகளைக் காண்பிப்பதில்லை, பெண்களைக் கேலி செய்யும் பாடல்களை அனுமதிப்பதில்லை, இரட்டை அர்த்த வசனங்களைப் பேசுவதில்லை, ஆபாச காட்சிகளில் நடிப்பதில்லை, ஜாதிப் பெயர் வருவது போலத் தலைப்பு வைப்பதில்லை என்ற விஷயங்களில் முடிவு எடுப்பதில் காட்டலாமே? இந்த விஷயங்களில் விழிப்புணர்வு ஏற்படுத்துவதற்காக ஊர்வலம் போகலாமே? கோஷங்கள் எழுப்பலாமே?

* கல்வி: நமது நவீனகால கல்வி நமது கலாச்சாரத்தை, நமது மொழி சார்ந்த அறிவை மலுங்கவைப்பதொடு, நமது நவீன கல்வி மூலம் உண்டாகும் கண்டுபிடிப்புகள் அனைத்தும் ஆக்க சக்திகளுக்கு, பயன்படுவதை விட அழிவு சக்திகளுக்கே, அதிகம் பயன்படுத்த படுகின்றன.

* சமகால இலக்கியங்கள்: நமது இயல், இசை, நாடகம், என்ற இலக்கியங்கள் இப்போது இந்த சினிமாகாரர்கள் கையில் சிக்கி, "எப்படி இருந்த இலக்கியங்கள் இப்படி ஆகிவிட்டது" என்பதை யாவரும் அறிந்ததே.

'குட்டி'யைத் தூக்கி வைத்துக் கொஞ்சாவிட்டாலும் பரவாயில்லை, ஈவிலுக்குப் போடுகிற ரொட்டியைக் குறைத்துக் கொள்ளலாமே? செய்யுமா திரை உலகம்? அல்லது திரைக்கு வெளியிலும் வேஷம் போடுமா?

     ....யாழினி....

No comments: