Jun 13, 2011

தாயே!

வறண்ட பூமியும் வெடித்த நிலமுமாய்

கிடந்ததென் வாழ்வு

ஓராயிரம் அவச்சொல்லுக்கு

ளாகியதென் பருவம்

ஊராரும் மதிக்கவில்லை

ஊர்க்குருவிகளின் வருகையேதுமில்லை

காலநதி புதுப்புனலாய்

புரண்டு வரும் கனவு ....

புல்லினங்கள் அசைந்தாட

நறுமலர்கள் பூத்துக்குலுங்கும்

ஓர் உன்னத நாளில்

உன் மடிமீது

இன்னொரு முறையும் பிறப்பேன்.

2 comments:

அம்பாளடியாள் said...

மனித உணர்வை இயற்கையோடு ஒப்பித்துவந்த கவிதைவரிகள் அருமை....அருமை!..வாழ்த்துக்கள்
உங்களுக்கு.தொடர்ந்தும் எழுதுங்கள்.நன்றி இப்பகிர்வுக்கு...

a.maleek said...

உங்கள் கருத்துக்களுக்கும் வருகைக்கும் நன்றி!!