Jun 13, 2011

அன்னா ஹசாரே சர்வாதிகாரி போல் செயல்படுகிறார்!!

JUNE 14, ஊழல் மற்றும் கறுப்பு பணத்துக்கு எதிராக போராட்டத்தில் ஈடுபட்டுள்ள அன்னா ஹசாரே, சர்வாதிகாரி போல் செயல்படுவதாக காங்கிரஸ் கட்சி குற்றம்சாட்டி உள்ளது.

டெல்லியில் செய்தியாளர்களிடம் பேசிய காங்கிரஸ் செய்தித் தொடர்பாளர் மனிஷ் திவாரி, அன்னா ஹசாரே பாரதீய ஜனதா மற்றும் ஆர்.எஸ்.எஸ். அமைப்பு ஆகியவை ஒன்று சேர்ந்து செயல்படுவாதாக கூறினார்.

தேர்ந்து எடுக்கப்படாத சர்வாதிகாரி போல் செயல்படும் நபரால் ஜனநாயகத்துக்கு பேராபத்து ஏற்பட்டு இருப்பதாகவும், தேசத்தை சீர்குலைக்க முயற்சிக்கும் சக்திகளின் கருவியாக அவர் செயல்படுவதாகவும் அப்போது மனிஷ் திவாரி குற்றம் சாட்டினார்.
பாபா ராம்தேவ், அன்னா கசாரே இவர்கள் ஆர்.எஸ்.எஸ். இயக்கத்தால் ஆட்டுவிக்கப்படும் பொம்மைகள் என்றும் கூறினார்.

No comments: