JUNE 8, புதுடெல்லி: அஸ்ஸாம் மாநிலத்தில் வீடு இல்லாத ஏழை மக்களுக்காக ரிஹாப் இந்தியா ஃபவுண்டேசன் மறுவாழ்வு கிராமம் திறக்கப்பட்டது.
டெல்லியை தலைமையிடமாக கொண்டு செயல்படும் அரசு சாரா நிறுவனம்தான் ரிஹாப் இந்தியா ஃபவுண்டேசன். அருகிலுள்ள கிராமங்களில் வாழும் வீடு இல்லாத 45 ஏழை குடும்பங்களுக்கு இந்நிகழ்ச்சியில் வீட்டிற்கான சாவி ஒப்படைக்கப்பட்டது.
1000 குடும்பங்களுக்கு வீடுகளை கட்டிக்கொடுப்பதுதான் இத்திட்டம். இதில் 51 வீடுகளின் நிர்மாணம் பூர்த்தியாகிவிட்டது. இத்திட்டத்திற்கு தேவையான அனைத்து நிலமும் வாங்கப்பட்டுவிட்டது.
வீடுகள் தவிர கல்வி நிலையம் மற்றும் மஸ்ஜிதும் கட்டுவதற்கும் திட்டமிடப்பட்டுள்ளது. திறப்பு விழா நிகழ்ச்சியில் ரிஹாப் இந்தியா ஃபவுண்டேசன் தலைவர் இ.அபூபக்கர் வீடுகளுக்கான சாவிகளை உரியவர்களுக்கு வழங்கினார்.
ரிஹாப் இந்தியா ஃபவுண்டேசனின் பொது செயலாளர் கெ.எம்.அஷ்ரஃப் அமைப்பின் செயல்பாடுகளை விவரித்தார். பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியாவின் தேசிய தலைவர் இ.எம்.அப்துற்றஹ்மான், பொன்கய்காவ் மாவட்ட கூடுதல் கலெக்டர் அப்துற்றஹீம் ஷேக், ரிஹாப் அறங்காவலரும்(trustee) மில்லி கஸட் பத்திரிகையின் ஆசிரியருமான டாக்டர் ஷஃபருல் இஸ்லாம் கான் ஆகியோர் இந்நிகழ்ச்சியில் பங்கேற்றனர்.

1 comment:
புதிய செய்தி...
Post a Comment