கொழும்பு, ஜூன் 15, "இலங்கையின் கொலைக்களம்" என்னும் தலைப்பில் இலங்கையின் போர்க்குற்றம் மற்றும் மனித உரிமை மீறல்கள் குறித்த விடியோவின் முழுத் தொகுப்பை பிரிட்டனின் "சேனல் 4" தொலைக்காட்சி ஒளிபரப்பவுள்ளது.
இதுகுறித்த விளம்பரங்கள் அந்த தொலைக்காட்சி சார்பில் பிரிட்டனின் முக்கியப் பத்திரிகைகளில் வெளியிடப்பட்டுள்ளன. த சண்டே டைம்ஸ், த இன்டிபென்டன்ட், மெயில் ஒன் சண்டே உள்ளிட்ட பிரிட்டன் பத்திரிகைகளில் இந்த விளம்பரம் வெளியாகியுள்ளது.
ஈழத் தமிழர்களுக்கு எதிரான நடவடிக்கைகளை வெளிப்படுத்தவும், தமிழர் அல்லாதவர்களும் இந்த விடியோ காட்சியை பார்க்கச் செய்ய வேண்டும் என்ற நோக்கத்தில் பெரும் பணத்தை செலவழித்து இவ்வாறு பத்திரிகைகளில் விளம்பரம் செய்யப்பட்டுள்ளதாக இணையதளத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
இதனிடையே, ஜூன் 14-ம் தேதி சேனல் 4-ல் ஒளிபரப்பாகவுள்ள இலங்கை போர்க்குற்றம் தொடர்பான விடியோ குறித்து பிரிட்டன் தமிழர் பேரவை உள்ளிட்ட பல்வேறு தமிழர் அமைப்புகள், துண்டுப் பிரசுரங்கள் மூலம் பிரசாரத்தில் ஈடுபட்டுள்ளன.

No comments:
Post a Comment