May 25, திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள மணிமுத்தாறு நீர்த்தேக்கத்தில் இருந்து பெருங்கல் கால்வாய் வழியாக தண்ணீர் திறந்துவிட முதல்வர் ஜெயலலிதா உத்தரவிட்டுள்ளார். இத்தகவல், தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பாசன சாகுபடிக்காக தண்ணீர் திறந்துவிடுமாறு விவசாயப் பெருமக்களிடம் இருந்து கோரிக்கைகள் வந்தது.
அதை ஏற்று மே 27 முதல் மணிமுத்தாறு நீர்த்தேக்கத்தில் இருந்து, கார் பருவ சாகுபடிக்காக 105 நாட்களுக்கு தண்ணீர் திறந்துவிட முதல்வர் ஜெயலலிதா உத்தரவிட்டுள்ளார்.
இதன் மூலம், அம்பாசமுத்திரம் பகுதியில் உள்ள 1,258 ஏக்கர் நிலங்கள் பாசன வசதி பெறும் என்றும் அந்த செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

No comments:
Post a Comment