May 25, 2011

மாவோஸ்ட் மக்கள் போராளிகள் அதிரடி தாக்குதல்!!

May 26, சத்தீஷ்கார் மாநிலத்தில் மாவோஸ்ட் மக்கள் போராளிகள் நடத்திய அதிரடி தாக்குதலில் போலீஸ் கூடுதல் சூப்பிரண்டு உள்பட 10 பேர் பலியானார்கள்.

சத்தீஷ்கார் மாநிலம் கரியாபாண்ட் மாவட்ட கூடுதல் போலீஸ் சூப்பிரண்டு ராஜேஷ் பவார் தலைமையில் 10 போலீசார், ரோந்துப் பணியிலும், காணாமல்போன போலீசாரை தேடியும் ஒரிசா மாநில எல்லைப் பகுதிக்கு சென்றனர்.

அங்கு அடர்ந்த காடுகளில் அவர்கள் தீவிர தேடுதல் வேட்டை நடத்தினார்கள். அவர்கள் தங்கள் பணியை முடித்து விட்டு தங்களது பல்நோக்கு வாகனத்தில் திரும்பிக் கொண்டிருந்தனர்.

இடையில் அவர்களின் வாகனம் பழுதாகி விட்டது. இதனால், ஒரு டிராக்டரை பிடித்து அதில் ஊருக்கு திரும்பிக் கொண்டிருந்தனர். போலீசார் தங்களது வாகனத்தை விட்டு, டிராக்டரில் வருவதை அறிந்து, மாவோஸ்ட் மக்கள் போராளிகள் அந்தப் பகுதிக்கு விரைந்தனர்.
டிராக்டரை தகர்க்க நிலத்தில் கண்ணி வெடிகளை புதைத்து வைத்தனர்.

தடுபாரா அமாபோலா என்ற பகுதியில் அந்த டிராக்டர் சென்று கொண்டிருந்தபோது மாவோஸ்ட் மக்கள் போராளிகள் கண்ணி வெடியில் சிக்கி டிராக்டர் வெடித்து சிதறியது. அதே சமயம் அங்கு பதுங்கி இருந்த போராளிகள் போலீசாரை நோக்கி சரமாரியாக துப்பாக்கியால் சுட்டார்கள்.

இந்த தாக்குதலில், கூடுதல் போலீஸ் சூப்பிரண்டும், அவருடன் சென்றிருந்த 9 போலீசாரும் அந்த இடத்திலேயே ரத்த வெள்ளத்தில் பிணமாக சாய்ந்தார்கள். இதுபற்றிய தகவல் கிடைத்ததும், மத்திய ஆயுதப்படை போலீசார், அதிரடிப்படை போலீசார் கொண்ட பெரிய போலீஸ் படை அந்தப் பகுதிக்கு அனுப்பி வைக்கப்பட்டது. அவர்கள் அந்தப் பகுதியை முற்றுகையிட்டு, தப்பி ஓடிய போராளிகள் தீவிரமாக தேடி வருகிறார்கள்.

No comments: