![](https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEg5VmqI1fFn5HsT6ey2FoSWzR_wBNGTJMPIz0AlNznlYup7MLP3gnyk6ks-sWYhbR-tYTdiqPWnRtBFzaXOGMxZDp4QHR6O1qgruqPMNA4ET6SgRmUG6lt651aoxw_h5oGiEkkZTEU-KXc/s200/assambly-0ld-new.jpg)
திமுக அரசால் அனைவரும் வியக்கும் வகையில் சென்னை ஓமந்தூரார் அரசினர் தோட்டத்தில் தலைமைச் செயலகம் மற்றும் சட்டமன்ற வளாகம் கட்டப்பட்டது. இதனை புனித ஜார்ஜ் கோட்டைக்கு மாற்ற பல்வேறு தரப்பினரும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.
இந்நிலையில் தலைமைச் செயலகத்தை மாற்ற எதிர்ப்பு தெரிவித்து, வழக்கறிஞர் கிருஷ்ணமூர்த்தி என்பவர் தொடர்ந்த வழக்கு சென்னை உயர்நீதிமன்றத்தில், நீதிபதிகள் ராஜேஸ்வரன், வாசுகி ஆகியோர் முன்பு 18.05.2011 அன்று விசாரணைக்கு வந்தது.
அப்போது மனுதாரரான வழக்கறிஞர் கிருஷ்ணமூர்த்தி, அதிக பொருட்செலவில் கட்டப்பட்ட தலைமைச் செயலகத்தை மாற்றக்கூடாது என்று வாதிட்டார். இதுதொடர்பாக அரசு ஏதேனும் உத்தரவு பிறப்பித்துள்ளதா என்று நீதிபத்கள் கேள்வி எழுப்பினர்.
அதுகுறித்து தகவல் எதுவும் இல்லை என்றும், பத்திரிகை மற்றும் ஊடகங்களில் அவ்வாறு செய்திகள் வருவதாகவும் மனுதாரர் கிருஷ்ணமூர்த்தி தெரிவித்தார். அமைச்சரவை கூட்டத்திற்கு பின்னர்தான் இதுகுறித்து முடிவு எடுக்கப்படும் என்று முதல் அமைச்சர் தெரிவித்துள்ளாரே என்று நீதிபதிகள் கேள்வி எழுப்பினர்.
இந்த வழக்கில் அதிமுக பொதுச்செயலாளர் ஜெயலலிதா மூன்றாவது பிரதிவாதியாக சேர்க்கப்பட்டுள்ள நிலையில், யாருடைய உத்தரவின்பேரில் இந்த மாற்றம் நடைபெற்று வருகிறது என்பது தெரிய வேண்டும் என்று மனுதாரர் வலியுறுத்தினார்.
இந்த மனுவில் அதிமுக பொதுச்செயலாளர் ஜெயலலிதா பெயரை நீக்க வேண்டும் என்று அவருடைய வழக்கறிஞர் நவநீதகிருஷ்ணன் கூறினார். இருதரப்பு வாதத்தையும் கேட்ட நீதிபதிகள், இதுதொடர்பாக வரும் ஜூன் 16ஆம் தேதிக்குள் பதில் அளிக்குமாறு தமிழக அரசின் தலைமைச் செயலாளர், பொதுப்பணித்துறைச் செயலாளர் ஆகியோருக்கு நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்டனர்.
அதிமுக பொதுச்செயலாளர் என்ற முறையில் ஜெயலலிதாவுக்கும் நோட்டீஸ் அனுப்ப உத்தரவிடப்பட்டுள்ளது. இதனிடையே அரசு தலைமைச் செயலகம் மற்றும் சட்டமன்ற வளாகம் மாற்றம் தொடர்பாக உத்தரவு பிறப்பித்தால், மனுதாரர் உடனடியாக உயர்நீதிமன்றத்தை அனுகலாம் என்றும் நீதிபதிகள் தெரிவித்துள்ளனர்.
1 comment:
இங்கு விமர்சனம் சொல்லும் யாரும் கருணாநிதியை அயோக்கியன் என்றும் ஜெயலலிதாவை யோக்கியமான பெண் என்றும் நம்பவில்லை. எல்லாருமே ஒரே சாக்கடையில் ஊறிய பன்றிகள்தான். இந்த பன்றிக்கு தமிழ் மக்கள் பல காலம் ஒய்வு கொடுத்துவிட்டார்களே திருந்தி இருக்குமே என்று நினைத்தோம். முருகனுக்கு இருபக்கமும் வள்ளியும் தெய்வானைய்யும்போல் ஒரு புறம் அரக்கன் மோடி மறு புறம் சகுனி சோ. எங்கே நம் தமிழகம் உருப்படப்போகிறது.?
MOHAMED THAMEEM
Post a Comment