May 4, மரபணு மாற்றக் கத்தரிக்காயை இந்தியாவில் பயிரிட அனுமதிக்கக் கூடாது என்று இந்திய ஜனநாயகக் கட்சி வலியுறுத்தியுள்ளது.இது குறித்து அக்கட்சியின் நிறுவனர் பாரிவேந்தர் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில்,
மரபணு மாற்றம் செய்யப்பட்ட கத்தரிக்காய் உடல் நலனுக்கு பெரும் கேடு விளைவிப்பதுடன், விவசாய நிலங்களையும் தரிசு நிலமாக மாற்றிவிடும்.
இந்திய விவசாயிகளின் நலனுக்கு புறம்பாக, சர்வதேச நிறுவனங்களை அனுமதிப்பது ஏற்றுக்கொள்ள முடியாத செயலாகும். மரபணு பயிர்கள் அனைத்தும் வைரஸ் கிருமிகளை கொண்டு உருவாக்கப்படுவதால், ஏற்கெனவே நமது நாட்டில் உள்ள பல வைரஸ் நோய்களுடன் இதுவும் சேர்ந்து நோய் அதிகரிக்கும் வாய்ப்பு உள்ளது.
எனவே, மரபணு மாற்றம் செய்யப்பட்ட கத்தரிக்காயை இந்தியாவுக்குள் அனுமதிக்கக் கூடாது என்று இந்திய ஜனநாயகக் கட்சி சார்பில் மத்திய அரசை வலியுறுத்திக் கேட்டுக்கொள்கிறோம்’ என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

1 comment:
Sorry, being the language barrier, I cannot appreciate your blog posting.
Post a Comment