
கூடலூர் இன்ஸ்பெக்டர் ஜெயசந்திரன் தலைமையில் தனிப்பிரிவு போலீசார் குமுளி செக்போஸ்டில் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர்.
கம்பத்திலிருந்து குமுளிக்கு சென்ற அரசு பஸ்சில் இருந்த துணி பைகளில், பாறைகளை வெடிக்க பயன்படுத்துவதற்காக வைக்கப்பட்டிருந்த 600 டெட்டனேட்டர்கள் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.
வெடிபொருட்களை கொண்டு வந்த கே.கே.பட்டியை சேர்ந்த மொக்கைராஜ் (51) என்பவரிடம் விசாரித்தனர். விசாரணையில் கேரள மாநிலம், தொடுபுழா பகுதியில் பாறைகளை உடைப்பதற்காக வெடி பொருட்கள் கொண்டு செல்வது தெரிந்தது.
முறையான ஆவணம் இல்லாததால் வெடிபொருட்களை பறிமுதல் செய்து, மொக்கைராசுவை போலீசார் கைது செய்தனர். மொக்கை ராசு முகைதீன் பிச்சையாக இருந்தால் என்னவாகும் நிலைமை? தமிழகமே அல்லோல கல்லோலப்பட்டிருக்குமே!
சிந்திக்கவும்: ஹிந்துத்வா பத்திரிக்கைகள் இப்படித்தான் செய்தி வெளியிட்டு இருப்பார்கள். இந்த தினமணி, தினமலர், இந்தியா டுடே போன்ற பத்திரிக்கைகள் இப்படித்தான் பத்திரிகை விபச்சாராம் செய்து ஹிந்துத்துவாவை பரப்பி, முஸ்லிம் வெறுப்பு பிரச்சாரத்தை மேற்கொண்டு வருகின்றன.
ஒரு சாதாரண செய்தியை எப்படி பூதகரமாக்குவார்கள் என்பதற்கு இந்த செய்தி ஒரு உதாரணம் அவர்களுக்கு புரியவேண்டும் என்ற நோக்கில்தான் இந்த தலைப்பு மாற்றி வெளியிடப்பட்டுள்ளது.
3 comments:
இப்போ நீங்க மட்டும் என்ன பண்றீங்க? நீங்க முஸ்லிம் ஆதரவு இணையமா?
* இலங்கை - ஊசலாடும் உயிர்கள்.
* பாகிஸ்தான் - 'பாமி' ருக்க பயமேன்?.
Yes, You are 100% correct.
// ஒரு சாதாரண செய்தியை எப்படி பூதகரமாக்குவார்கள் என்பதற்கு இந்த செய்தி ஒரு உதாரணம் அவர்களுக்கு புரியவேண்டும் என்ற நோக்கில்தான் இந்த தலைப்பு மாற்றி வெளியிடப்பட்டுள்ளது.//
appreciate your comment.
regards
asalamone
Post a Comment