Apr 27, 2011

எகிப்த் & லிபியா புரட்சி!! ஒரு ஒப்பாய்வு!!

உலகின் நாகரீகத்தின் தொட்டில் என்று அழைக்கப்படும் நாடு எகிப்த். இவர்கள் நாகரிகத்தில் அடைந்த உட்சம் அதனால் அவர்கள் வாழ்வில் உல்லாசம்.

இந்த உல்லாசத்திலே லயித்து அரசியல் பற்றி ஆராய கூட மனமில்லாமல் 35 வருடங்களுக்கு மேல் கழித்து விட்டார்கள்.

தங்கள் வாழும் வாழ்வில் சில குறைபாடுகள் பொருளாதார ரீதியில் குறுக்கிட நேர்ந்த போது விழித்து பார்த்ததன் விளைவுதான் மக்கள் புரட்சி.

வேலை வேண்டும், நல்ல கல்வி வேண்டும், நல்ல நவீனயுக யுக்திகளை கையாள வேண்டும் என சிந்தித்ததின் விளைவு மக்கள் ஆட்சி மாற்றத்தை நாடினர்.

கத்தியின்றி, ரத்தமின்றி, அகிம்சை முறையிலும் அழகிய முறையிலும் ஒரு போராட்டத்தை, புரட்சியை நடத்தி காட்டினர்.

ஊழல் செய்வதில், சுகபோகம் அனுபவிப்பதில் மட்டுமே கவனம் செலுத்திவந்த எகிப்த்து அதிபர் செய்வதறியாது திகைத்தார்.

அடக்குமுறைகளை கையாண்டு எதுவும் பலிக்காமல் பதவி விலகியது எல்லாமே நாகரிகமான முறையில் நடந்தேறியது.

ஒரு பெரும் போராட்டத்தை நடத்திய மக்கள்! போராட்டம் முடிந்து வீடு திரும்பும் முன் சாலைகளில் கிடந்த குப்பைகளை அகற்றி சுத்தம் செய்தது வியப்பின் உட்சம்.

சில இடங்களில் தண்ணீர் விட்டு சுத்தம் செய்து! எதுவுமே நடக்காதது போன்று கலைந்து சென்ற செயல்! உலகில் புரட்சி செய்யவேண்டும் என்று நினைக்கும் மக்களுக்கு! ஒரு முன்மாதிரி.


லிபியா நாட்டின் புரட்சி.................

லிபிய மக்கள் கடாபியை ஒரு ஹீரோவாக, கடாபி எது செய்தாலும் ஆகோ!! ஓஹோ என்று போற்றி! அவரை தலையில் வைத்து கூத்தாடினார்கள்.

எளிமையான தலைவன், யாருக்கும் பயப்படாத தலைவன் என்று தம்பட்டம் அடித்ததன் விளைவு கடாபியால் அந்த ஆட்சியை துறக்க முடியவில்லை.

21 நூற்றாண்டை கடந்து வந்த மக்கள் நவீன விஞ்சான யுகத்தில் உலகில் நடக்கும் ஆட்சிகளை, மாற்றங்களை பார்கிறார்கள்.

அதனால் மக்களால் தேர்ந்தெடுக்கபடும் ஒரு ஆட்சியை விரும்புகிறார்கள். குடும்ப அரசியலுக்கு, ஆட்சிக்கு ஒரு முற்று புள்ளி வைக்க வேண்டும் என்று நினைகிறார்கள்.

ஆனால் அந்த மக்கள் கையாண்ட போராட்ட முறைதான் தவறாக அமைந்து விட்டது.
தலைவனின் மூர்க்கம் நன்கு அறிந்த மக்கள் ஆயுத போராட்டத்தில் குதித்ததின் விளைவு அழிவுகள் பலவற்றை லிபிய சந்தித்து வருகிறது.

என்று மக்கள் ஒரு ஆட்சியாளனை விரும்பவில்லையோ உடனே ஆட்சியை விட்டு இறங்கிவிடு என்று சீன அறிவாளி பைதீகூ சொன்ன கருத்து நினைவுக்கு வருகிறது.

தாங்கள் ஆளும் நாடே சுடுகாடானாலும் அதை அலட்சியம் செய்யாமல் தங்கள் ஆட்சி கட்டிலை தக்கவைத்து கொள்ள நினைப்பவர்கள் தான் லிபிய ஆட்சியாளர்கள்.

இது லிபியாவில் மட்டும்தான் என்று இல்லை உலகம் முழுவதும் பலநாடுகளில் இதே நிலைதான்.

இதில் நம் ஜனநாயக கோமாளிகள் நடத்தும் தெருக்கூத்து ரொம்பவும் வேடிக்கையானது. இவர்கள் ஆட்சி கட்டிலுக்காக நாகரிகம் இல்லாமல் மிருகங்கள் போல் அடித்து கொள்வதும், கோமாளித்தனமான கொள்கைகள் பேசித்திறிவதும் விநோதமானது, வேடிக்கையானது.

----------- ராஜ யோகி -----------

No comments: