கொழும்பு, ஏப். 30,விடுதலைப்புலிகளின் தளபதி ரமேஷ் கொடிய சித்திரவதைக்குப் பிறகு சீருடை அணிவித்து சுட்டுக் கொல்லப்பட்டுள்ளார்.
இதற்கான புகைப்பட ஆதாரம் ஐநா அறிக்கையின் போர்க்குற்ற ஆதாரப் படங்களில் இடம்பெற்றுள்ளது. சிங்கள ராணுவத்திடம் ரமேஷ் சரணடைந்த பின்னர் கடுமையான விசாரணைக்கு உட்படுத்தப்படும் வீடியோவும், ராணுவ வாகனம் ஒன்றில் வைத்து விசாரிக்கப்படும் வீடியோவும் முன்னதாக வெளியாகி இருந்தன.
எனினும் ரமேஷ் எங்கே என அவரது குடும்பத்தினர் விசாரித்தபோது அவர் குறித்து எதுவும் தெரியாது என்று அரசுத் தரப்பில் பொய் கூறியிருப்பது குறிப்பிடத்தக்கது. நடேசன், புலித்தேவன் ஆகியோருடன் சேர்ந்தே ரமேஷ் சரணடைந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
நடேசனையும், புலித்தேவனையும் எரித்துக் கொன்ற சிங்கள ராணுவம், ரமேஷை கொடுமையாக தாக்கி, தலையை நசுக்கி சுட்டுக் கொன்றுள்ளது. தற்போது வெளியாகி உள்ள போர்க் குற்றப் படங்களில் ரமேஷ் சுட்டுக் கொல்லப்பட்ட படம் இடம்பெற்றுள்ளது.
அதே போல, புலிகளின் கட்டளைத் தளபதிகளுள் ஒருவரான கேணல் பானுவும் கொடுமையாக கொல்லப்பட்டுள்ளார். அவரை கொடூரமாக கொன்ற சிங்களப் படை, பின்னர் சீருடை அணிவித்து படமெடுத்து உலகுக்கு கொடுத்து நாடகமாடியது. ஆனால் அதற்கு முன் அவர் எப்படியெல்லாம் சித்திரவதைக்குட்படுத்தப்பட்டார் என்பது இப்போது படங்களாக வெளிவரத் துவங்கியுள்ளன.
Subscribe to:
Post Comments (Atom)
1 comment:
We have to thank Srilankan Army for making him a MARTYR :)
Post a Comment