போபால், ஏப்.1- உலகக் கோப்பை கிரிக்கெட் இறுதிப் போட்டியில் இந்தியா வென்றால், தான் நிர்வாணமாக ஓடுவதாக அறிவித்த மாடல் அழகி பூனம் பாண்டே மீது ஒருவர் வழக்கு தொடர்ந்துள்ளார்.
இதுதொடர்பாக, ஆர்.கே. பாண்டே என்னும் வழக்கறிஞர் போபால் முதன்மை நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்திருக்கிறார்.
மாடல் பூனம், தனது நடவடிக்கையின் மூலம் குறிப்பிட்ட சமூகத்தினரை கேவலப்படுத்துகிறார் என்று அவர் தனது மனுவில் குற்றம்சாட்டியுள்ளார்.
"பூனம் கூறியது போல் அவர் நிர்வாணமாக ஓடவில்லை என்றாலும், குறிப்பிட்ட சமூகத்தினரை கேவலப்படுத்திய அவரை தண்டிக்க வேண்டும். இந்தியக் கலாசாரத்தையும் அவர் அவமானப்படுத்திவிட்டார்." என்று வழக்கறிஞர் ஆர்.கே. பாண்டே செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.
தொழிலதிபர் விஜய் மல்லையாவின் "கிங்பிஃஷர்" நிறுவனம் வெளியிட்ட காலண்டரில் புகைப்பட மாடலாக பூனம் தோன்றியுள்ளார்.
இதையடுத்து, பூனம் நிர்வாணமாக ஓடுவதற்கு மல்லையாவும் தூண்டுதலாக இருந்தார் என்றதன் அடிப்படையில் அவரது பெயரையும் தனது மனுவில் ஆர்.கே. பாண்டே குறி்ப்பிட்டுள்ளார். இந்த வழக்கு ஏப்ரல் 5-ம் தேதி விசாரணைக்கு வருகிறது.
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment