Apr 1, 2011

பா.ம.க., வேட்பாளரிடம் "மல்லுகட்டிய' மூதாட்டி!!!

ஏப்ரல் 2, மயிலம் : "முதியோர் பென்ஷன் கொடுக்க வரல... இதுக்கு மட்டும் வந்திட்டீங்களா...' என்று மயிலம் தொகுதியில் பா.ம.க., வேட்பாளர் ஓட்டு கேட்டபோது, மூதாட்டி ஒருவர் கேள்வி மேல் கேள்வி கேட்டு பரபரப்பை ஏற்படுத்தினார்.

விழுப்புரம் மாவட்டம் மயிலம் தொகுதி பா.ம.க., வேட்பாளர் பிரகாஷ், மயிலத்தில் வீடு வீடாகச் சென்று நேற்று ஓட்டு கேட்டார். அப்போது மூதாட்டி ஒருவர், "முதியோர் பென்ஷன் வாங்கித் தரல... இதுக்கு மட்டும் வந்துட்டீங்களா...' என்று கேள்வி கேட்க, வேட்பாளர் மிரண்டு போனார். அவருடன் வந்த கட்சி நிர்வாகிகள், "பாட்டி... அவரு இல்ல இவரு...' என்று சமாதானம் செய்துவிட்டு, பாட்டியிடமிருந்து வேட்பாளரை மீட்டு, அடுத்த வீட்டிற்கு பிரசாரம் செய்ய புறப்பட்டனர்.

1 comment:

பூங்குழலி said...

கலைஞர் மகள் செல்வியிடமும் இப்படி ஒரு முதியவர் அதிரடியாக கேள்வி கேட்டிருக்கிறார் ..இளைஞர்களை விட முதியவர்களுக்கு அதிக தில் இருக்கிறது