சென்னை, ஏப்.1- உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டியைப் பார்க்க வரும் இலங்கை அதிபர் ராஜபட்சவை இந்தியாவுக்குள் அனுமதிக்க கூடாது என்று விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன் கூறியுள்ளார்.
ஈழத் தமிழர்களை கொன்று குவித்த ராஜபட்ச, இந்தியாவுக்கு வருகை தருவது தமிழ்ச் சமூகத்தை வேதனைப்படுத்துவதாகும்.
பிரபாகரனின் தாயார் இறுதிச் சடங்கில் கலந்துகொள்ள நான் சென்றபோது, இந்திய எம்.பி., என்ற நிலையிலும் இலங்கை நாட்டுக்குள்ளேயே அனுமதிக்க முடியாது என தடைவிதித்தார்.
இந்திய அரசை அவமதிக்கும் வகையில் திருப்பி அனுப்பிய ராஜபட்ச இப்போது எந்த முகத்தை வைத்துக்கொண்டு இந்தியா வருகிறார்.
இந்திய அரசை தொடர்ந்து அவமதித்து வரும் ராஜபட்சவை அவ்வப்போது சிவப்புக் கம்பளம் விரித்து வரவேற்கும் இந்திய அரசின் போக்கு வேதனைக்குரியதாகவும் நகைப்புக்குரியதாகவும் உள்ளது.
சர்வதேசப் போர்க் குற்றவாளி என உலகின் பல நாடுகள் ராஜபட்சே மீது குற்றம்சாட்டுகிற நிலையில், இந்திய அரசு மட்டும் ராஜபட்சவை வரவேற்று ஊக்கப்படுத்துவது தமிழினத்தை மேலும் மத்திய அரசு வஞ்சிக்கிறது என்பதை மீண்டும் உறுதிபடுத்துகிறது.
சர்வதேச போர்க்குற்றவாளி ராஜபட்சவை இந்தியாவுக்குள் நுழைய அனுமதிக்க கூடாது என விடுதலைச் சிறுத்தைகள் கட்சி வற்புறுத்துகிறது. இவ்வாறு திருமாவளவன் தனது அறிக்கையில் தெரிவித்துள்ளார்.
Subscribe to:
Post Comments (Atom)
1 comment:
காலம் கடந்த கொக்கரிப்புகள். கொலைவெறியன் தகுந்த பாதுகாப்புகளுடன் வந்து சோந்துவிட்டான். போய் ஒரு பொன்னாடை போர்த்தி கட்டிப்பிடித்து ஒரு படம் எடுத்து பத்திரிகைகளுக்கு போட்டுவிடுங்கள். உங்கள் வீரம் தெரியட்டும். சேர்ந்திருப்பதோ கொலைவெறியர் கூட்டத்தில் பிறகு உலகை ஏமாற்ற ஒரு நாடகம். இனி தமிழன் ஏமாறமாட்டான். விரைவில் புரிந்துகொள்வீர்கள்.
Post a Comment