Apr 24, 2011

ஆர்.எஸ்.எஸ்.யின் பிடியில் மத்திய பிரதேசம்!! அதிர்ச்சி தகவல்!!

APRIL 24, புதுடெல்லி: மத்தியபிரதேச மாநில பள்ளிக்கூடங்களில் சூரிய நமஸ்காரம் கட்டாயமாக்கியதைத் தொடர்ந்து பகவத் கீதையை பாடதிட்டத்தில் இடம்பெறச் செய்ய உள்ளனர்.

2003-ஆம் ஆண்டு பா.ஜ.க அரசு பதவியேற்ற பிறகு கல்வி துறையை காவிமயமாக்கும் முயற்சியின் ஒரு பகுதியாக இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

கிறிஸ்தவ சிறுபான்மையினரின் சமூக வாழ்க்கைக் குறித்து தனியாக கணக்கெடுப்பு நடத்த காவல்துறைக்கு உத்தரவிட்டது முன்னர் சர்ச்சையை கிளப்பியிருந்தது.

2011-12 கல்வியாண்டில் பகவத் கீதையை பாடத் திட்டத்தில் உட்படுத்த முதல்வர் சிவராஜ்சிங் சவுகான் உத்தரவிட்டுள்ளார். உடனடியாக இதற்கான பணிகள் துவங்குமென அவர் உத்தரவிட்டுள்ளார்.

பா.ஜ.க அரசின் காவிமயமாக்கல் நடவடிக்கைகள்: 2007-ஆம் ஆண்டு சூரியநமஸ்காரம் கட்டாயமாக்கி அரசு உத்தரவு பிறப்பித்தது. மூச்சுப் பயிற்சியும் கட்டாயமாக்கப்பட்டது.
மதிய உணவுக்கு பிறகு போஜன மந்திரம் சொல்ல அரசு உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.

ஆர்.எஸ்.எஸ் நூல் பள்ளிக்கூடங்களில் விநியோகம் செய்ய அரசு தீர்மானித்தது. பாடத் திட்டத்திற்கும் இந்நூலுக்கும் சம்பந்தம் இல்லை. எனினும், இந்த நூலை மாணவர்கள் வாங்குகின்றார்களா? என்பதை உறுதிச்செய்ய அரசு பள்ளிக்கூடங்களுக்கு உத்தரவு பிறப்பித்தது.

பாடப் புத்தகங்களை அச்சடிப்பதற்கான பணி அரசு அச்சகங்களிலிருந்து மாற்றி ஆர்.எஸ்.எஸ் கட்டுப்பாட்டிலுள்ள அச்சகங்களிடம் ஒப்படைக்கப்பட்டது. மத்திய பிரதேச மாநிலத்தில் கிறிஸ்தவ சிறுபான்மையினரைக் குறித்த அனைத்து விபரங்களையும் சேகரித்து பாதுகாக்க கடந்த மார்ச் மாதம் அரசு அனைத்து காவல் நிலையங்களுக்கும் சுற்றறிக்கை அனுப்பியது.

கிறிஸ்தவர்களின் சமூக வாழ்க்கை, பாதிரியார்களின் எண்ணிக்கை, பிஷப்களின் விபரங்கள், மாநிலத்திலுள்ள சர்ச்சுகளின் எண்ணிக்கை, கிறிஸ்தவ நிர்வாகங்கள் நடத்தும் பள்ளிக்கூடங்களைக் குறித்த விபரங்களை தயார் செய்ய உத்தரவிட்டது.

கிறிஸ்தவர்களின் பொருளாதாரப் பின்னணி, கிறிஸ்தவ அரசியல்வாதிகளின் எண்ணிக்கை உள்ளிட்ட பல்வேறு விபரங்கள் சேகரிக்க உத்தரவிடப்பட்டிருந்தது. சில பாதிரியார்கள் இத்தகைய விபரங்களை ஒப்படைக்க மறுத்ததைத் தொடர்ந்து போலீஸார் அவர்களை காவல் நிலையம் அழைத்துச்சென்று அச்சுறுத்தினர்.

அரசு ஊழியர்கள் ஆர்.எஸ்.எஸ்ஸில் சேருவதற்கு முதல்வர் அழைப்பு விடுத்தது சர்ச்சையானது. பா.ஜ.கவின் கட்டுப்பாட்டிலுள்ள குஷபாவு தாக்கரே அறக்கட்டளைக்கு அரசு நிலம் வழங்கியதை சமீபத்தில் உச்சநீதிமன்றம் ரத்துச்செய்தது.

2 comments:

Anonymous said...

Jai Hindustan, i hope it should be developed all states of India,

Anonymous said...

ennada kodumaiya irrukku enka mannula nanka enka mathathin perumaiya sonna thappa unkala mathiri aluka irukira varaikkum india urupadathu