Apr 24, 2011

சீனாவில் மனித உரிமை மீறல்கள்!! அமெரிக்கா வருத்தம்!!

April 24, சீனாவில் மனித உரிமை மீறல்கள் அதிகரித்து வருவது குறித்து அமெரிக்காவும், சீனாவும் அடுத்த வாரம் பேச்சு வார்த்தை நடத்தத் திட்டமிட்டுள்ளன.

சீனாவில் ஆளும் கம்யூனிஸ்ட் கட்சிக்கு எதிராக யார் போர்க்கொடி தூக்கினாலும் அவர்களின் கதி அதோ கதி தான்.

அரசுக்கு எதிராகப் போராடியவர்கள் பலர் காணாமல் போய்விட்டனர். பலர் கைது செய்யப்பட்டுள்ளனர். மேலும் பலர் தண்டனை பெற்றுள்ளனர்.

இதுகுறித்து சர்வதேச நாடுகள் பலமுறை கண்டனம் தெரிவித்துள்ளன. எனினும் சீனா அதை கண்டு கொள்ளாமல் தனது மனித உரிமை மீறல்களை நடத்தி வருவதாக குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன.

சீனாவின் பிரபல ஓவியக் கலைஞரான அய் வெய்(53) தற்போது சிறையில் உள்ளார். இதனால் சீனாவில் மனித உரிமை மீறல்கள் அதிகரித்து வருவது குறித்து அமெரிக்கா கவலை கொண்டுள்ளது.

இதுகுறித்து இம்மாதம் 27 மற்றும் 28ம் திகதிகளில் பேச்சு வார்த்தை நடத்த அமெரிக்கா திட்டமிட்டுள்ளது. இதற்கு சீனாவும் ஒப்புதல் அளித்துள்ளது.

No comments: