கொல்கத்தா, மார்ச் 19- திரிணாமூல் காங்கிரஸ் தனது வேட்பாளர் பட்டியலை தன்னிச்சையாக அறிவித்துள்ளதன் மூலம், கூட்டணியில் இடம்பெற்றுள்ள காங்கிரஸ் கட்சியின் தலைவர் சோனியாவை அவமானப்படுத்தியுள்ளது என்று அக்கட்சி குற்றம்சாட்டியுள்ளது.
மேற்குவங்க காங்கிரஸ் மூத்த தலைவர்களில் ஒருவரும் முர்ஷிதாபாத் மாவட்ட காங்கிரஸ் தலைவருமான அதீர் செளத்ரி இவ்வாறு இன்று செய்தியாளர்களிடம் கூறியுள்ளார். வேட்பாளர் பட்டியலை மம்தா பானர்ஜி அவசரமாக அறிவித்துள்ளார்.
இன்னும் 2 நாட்களுக்கு காத்திருப்பதால் அவருக்கு என்ன பிரச்னை வந்துவிடப் போகிறது? வேட்பாளர் பட்டியலை தன்னிச்சையாக அறிவித்ததன் மூலம் அவர்கள் சோனியாவை அவமானப்படுத்தி விட்டனர்." என்று அவர் கூறியுள்ளார்.
"திரிணாமூல் காங்கிரஸின் நடவடிக்கை தேர்தல் கூட்டணியை பிளவுபடுத்துவதாக உள்ளது." என்றும் அதீர் செளத்ரி தெரிவித்துள்ளார். அதுபோல் தமிழ் நாட்டில் கருணாநிதியிடம் இருந்து சீட்டு வாங்க பாட்ட பாடு யாவரும் அறிந்ததே. ஈழதமிழர்களுக்கு காங்கிரஸ் செய்த துரோகம் காங்கிரஸை வரட்டி எடுக்கிறது. காங்கிரசின் வீழ்ச்சி ஆரம்பித்து விட்டது.
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment