Mar 11, 2011

காவல் துறையா? கயவர்கள் துறையா?

பெ.நா.பாளையம் : பெரியநாயக்கன்பாளையம் பத்திர பதிவு அலுவலகத்தில், லஞ்ச ஒழிப்புத்துறை இன்ஸ்பெக்டர்' எனக் கூறி, 10 ஆயிரம் ரூபாய் லஞ்சம் பெற முயன்ற போலீஸ் கைது செய்யப்பட்டார். கோவை மாவட்டம் ஒத்தக்கால் மண்டபம் ரோஸ் கார்டனில் வசிப்பவர் பெருமாள் (37). இவர் போத்தனூர் போலீஸ் ஸ்டேஷன் குற்றப்பிரிவில் போலீசாக பணியாற்றியவர். நேற்று மாலை பெரியநாயக்கன்பாளையம் பத்திர பதிவு அலுவலகம் வந்த பெருமாள், தன்னை லஞ்ச ஒழிப்புத் துறை இன்ஸ்பெக்டர் என அறிமுகப்படுத்திக் கொண்டார்.

பத்திரப் பதிவு அலுவலகத்துக்குள் இருந்த ஊழியர் செல்வராஜை, "ஆவணங்கள் எங்குள்ளது' என்று கேட்டார். பணி நிமித்தமாக அலுவலகத்துக்குள் இருந்த பத்திர எழுத்தர் மாயக்கிருஷ்ணனையும் மிரட்டினார்.மேலும், "வழக்கு எதுவும் பதியாமல் இருக்க 10 ஆயிரம் ரூபாய் ரொக்கம் தர வேண்டும்' எனவும் வற்புறுத்தினார். அவருடைய நடவடிக்கையில் சந்தேகப்பட்ட ஊழியர்கள், அவரை விசாரிக்க முயன்றனர். அதற்குள் பெருமாள் அங்கிருந்து நழுவ முயன்றார். ஊழியர்கள் அவரைப் பிடித்து பெரியநாயக்கன்பாளையம் போலீசில் ஒப்படைத்தனர்

No comments: