Mar 9, 2011

சவூதி அரேபியாவில் தேஜஸ் மலையாள நாளிதழ் உதயம்!!

ரியாத்,மார்ச்.10:'மலையாள வாசகர்களின் மனசாட்சி' எனக் கருதப்படும் தேஜஸ் நாளிதழின் சவூதி அரேபியாவின் முதல் பதிப்பு இன்று உதயமாகிறது. இதனை இண்டர்மீடியா பப்ளிஷிங் நிறுவனத்தின் தலைவர் நாஸருத்தீன் எழமரம் பத்திரிகையாளர்கள் சந்திப்பில் தெரிவித்தார்.

இன்று இரவு 8.30 மணிக்கு மலாஸ் கார்டன் பாலஸ் ஆடிட்டோரியத்தில் சவூதி செய்தி ஒலிபரப்பு அமைச்சகத்தின் அதிகாரப்பூர்வ செய்தித் தொடர்பாளரும், சவூதி தொலைக்காட்சி ஜெனரல் சூப்பர்வைசருமான ஷேக் அப்துற்றஹ்மான் அல் ஹஸ்ஸா கல்ஃப் தேஜஸ் பத்திரிகையின் சிறப்பு பதிப்பை வெளியிடுவார்.

வளைகுடா தேஜஸ் ஸ்பான்சரும், சவூதி-சிங்கப்பூர் பிசினஸ் கவுன்சில் தலைவருமான அல் ராமிஸ் இண்டர்நேசனல் குழுமத்தின் தலைவர் ஷேக் அப்துல்லாஹ் ஸெய்த் அல் மலேஹி முதல் பிரதியை வாங்குவார். இந்நிகழ்ச்சிக்கு இ.அபூபக்கர் ஸாஹிப் தலைமை வகிப்பார்.

முதல் கட்டமாக வளைகுடா தேஜஸின் பதிப்பு சவூதி அரேபியாவில் ரியாத் மற்றும் தம்மாம் நகரங்களிலிருந்து வெளிவரும். இரண்டு மாதத்திற்குள் பஹ்ரைன், குவைத், கத்தர் ஆகிய இடங்களிலிருந்தும் பதிப்புகள் வெளியாகும். சவூதியில் முக்கிய வெளீயீட்டாளரான சவூதி டிஸ்ட்ரிப்யூசன் நிறுவனம்தான் வளைகுடா தேஜஸ் பத்திரிகையை விநியோகிக்கும்.

No comments: