புதுடெல்லி: ஹிந்துத்துவா பயங்கரவாதிகள் நடத்திய அனைத்துக் குண்டுவெடிப்புகள் தொடர்பான வழக்குகளும் தேசிய புலனாய்வு ஏஜன்சியிடம் ஒப்படைக்கப்படவுள்ளது.
இதுத்தொடர்பான முறையான அறிக்கை அடுத்தவாரம் வெளியிடப்படுவதோடு என்.ஐ.ஏ விசாரணையைத் துவக்குமென அதிகாரப்பூர்வ வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
ஹிந்துத்துவா பயங்கரவாத அமைப்புகள் சம்பந்தப்பட்ட ஏழு பயங்கரவாத வழக்குகள் உள்ளன. இவற்றை என்.ஐ.ஏவிடம் ஒப்படைக்க மத்திய உள்துறை அமைச்சகம் தீர்மானித்துள்ளது. தற்போது வழக்கை விசாரித்துவரும் புலனாய்வு ஏஜன்சிகளிடம் உள்துறை அமைச்சகம் கருத்துக்களை கேட்டது. இதற்கு மஹராஷ்ட்ரா, ராஜஸ்தான் மாநில அரசுகளும், சி.பி.ஐயும் என்.ஐ.ஏ விசாரணைக்கு ஆதரவாக கருத்துத் தெரிவித்துள்ளன.
மத்திய பிரதேச மாநில பா.ஜ.க அரசு எதிர்ப்பு தெரிவித்தாலும் என்.ஐ.ஏவுக்கு இவ்வழக்குகளை பொறுப்பேற்று விசாரணை நடத்துவதற்கு தடை இல்லை. எந்த பயங்கரவாத வழக்கையும் என்.ஐ.ஏவுக்கு ஏகமனதாக வழங்க என்.ஐ.ஏ சட்டம் மத்திய அரசுக்கு அதிகாரம் அளித்துள்ளது. அதற்கு மாநில அரசின் அனுமதி தேவையில்லை.
பல்வேறு விசாரணைகளின் வாயிலாக ஏற்படும் வேறுபாடுகள் குற்றவாளிகள் விசாரணை வேளையில் தப்பிவிடலாம் என புலனாய்வு ஏஜன்சிகள் கவலை தெரிவித்ததையடுத்து என்.ஐ.ஏவிடம் வழக்குகளை ஒப்படைக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது. சம்ஜோதா எக்ஸ்பிரஸ், மொடாஸா குண்டுவெடிப்பு வழக்குகளை ஏற்கனவே என்.ஐ.ஏ பொறுப்பேற்று விசாரணை நடத்திவருகிறது.
2006-இல் மலேகான் குண்டுவெடிப்பு, 2007-இல் மக்கா மஸ்ஜித் குண்டுவெடிப்பு ஆகியவற்றை சி.பி.ஐ விசாரணைச் செய்கிறது. 2007-அஜ்மீர் குண்டுவெடிப்பை ராஜஸ்தான் ஏ.டி.எஸ்ஸும், 2008 மலேகான் குண்டுவெடிப்பு வழக்கை மஹராஷ்ட்ரா ஏ.டி.எஸ்ஸும் விசாரணைச் செய்து வருகின்றன.
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment