Mar 13, 2011

மன்னர் ஆட்சிக்கு வந்த சோதனையப்பா !!!

தொடர்ந்து சரிந்துவரும் மன்னர் ஆட்சிகளில் சவூதியையும் விட்டு வைக்கவில்லை. சவுதி அரேபியாவில் மாற்றத்தை விரும்பி, இதுவரை அமைதி புரட்சி நடத்தி வந்த முஸ்லிம்கள் தற்போது, அரசுக்கு எதிராக வெளிப்படையான கிளர்ச்சியில் இறங்கியுள்ளனர். உலகின் எண்ணெய் இருப்பில் 20 சதவீதத்துடன் முன்னணியில் இருக்கும் நாடு சவுதி அரேபியா. லிபியா அரசியல் நெருக்கடியால் குறைந்துள்ள எண்ணெய் ஏற்றுமதியை, சவுதி அரேபியா ஈடு செய்து வருகிறது.

மத்திய கிழக்கு மற்றும் வட ஆப்ரிக்க நாடுகளில் ஏற்பட்ட மக்கள் கிளர்ச்சியின் பாதிப்பால், கடந்த 4ம் தேதி, சவுதி அரேபியாவில் அரசுக்கு எதிராக மக்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இதுவரை சவுதியில் அரசு ஆதரவுடனோ அல்லது தனிப்பட்ட முறையிலோ ஆர்ப்பாட்டங்கள் நடந்தது இல்லை. 1930ம் ஆண்டில் இருந்து அந்நாட்டில் ஆர்ப்பாட்டங்களுக்குத் தடை விதிக்கப்பட்டுள்ளது. கடந்த 4ம் தேதி, பேஸ்புக் இணையதளத்தின் மூலம் ஆர்ப்பாட்டத்திற்கு பிரசாரம் மேற்கொள்ளப்பட்டது.

No comments: