Mar 7, 2011

இப்படியும் ஒரு எம்.எல்.ஏ.​ வா? அதிர்ச்சி ரிப்போர்ட்!!

இந்த அருமையானத் தொடரின் வாயிலாக எங்கள் தொகுதியின் சட்டமன்ற உறுப்பினரின் செயல்பாட்டை மக்களுடன் பகிர்ந்துகொள்ள ஒருவாய்ப்பை தந்த பாலைவனத் தூதிற்கு நன்றி.
எனது தொகுதி நெல்லை மாவட்டத்திலுள்ள நாங்குநேரி.

எனது தொகுதியின் சட்டமன்ற உறுப்பினர் திரு.வசந்தகுமார் ஆம் வசந்த்&கோ வின் உரிமையாளரான சாட்சாத் அந்த வசந்தகுமாரே தான். காங்கிரஸ் கட்சியை சேர்ந்தவரான இவர் முதன்முறையாக எங்கள்(நாங்குநேரி) தொகுதியில் தான் வெற்றிப்பெற்றார்.

"அடிப்படையிலேயே பல செல்வங்களுக்கு சொந்தக்காரனும் பல நிறுவனங்களுக்கு அதிபரான நான் எம்.எல் ஏ. பதவியின் மூலம்தான் சம்பாதிக்க வேண்டும் என்பதில்லை" என தன் பிரச்சாரத்தில் தெரிவித்தவர்.

இவருக்காக பல இயங்கங்கள் முழுவீச்சில் பிரச்சாரம் செய்தன. "மக்களுக்கு சேவை செய்வதற்காகவே நான் இப்பொறுப்புக்கு வர நினைக்கிறேன். அவ்வாறு நான் செய்யாவிட்டால் என் சட்டையை பிடித்து இழுத்து கேட்கும் உரிமையை நான் உங்களுக்கு வழங்குகிறேன்" என்று தன் பிரச்சாரத்தின் வாயிலாக முழங்கினார்.

ஆனால் சொன்னபடி நடந்தாரா??? எங்கே தன் சட்டையை பிடித்து இழுத்துவிடுவாரோ என்று பயந்து டெல்லிக்கு சென்று ஒளிந்துக்கொண்டார். இவரை காண வேண்டும் என்றால் எம்.எல் ஏ. ஆன பின்பு இவர் மக்களுக்காக!! தொடங்கிய இவரது வசந்த் டிவி-யில் அல்லது வசந்த்&கோ வின் விளம்பரத்தில் மட்டுமே காண முடிந்தது.

இவர் தன் தொகுதி மக்களுக்கு அதிகமாக செய்தது என்னவென்றால் தன் படம் போட்ட காலண்டர் அடித்து கொடுத்ததும் தன் கட்சியின் தலைவி சோனியாவின் பிறந்தநாளுக்கு வழங்கிய காங்கிரஸ் கட்சியின் கரையிட்ட துண்டுமேயாகும்.

நாங்குநேரி தொகுதி மக்களே, நம் தொகுதியில் எங்காவது ஒழுங்கான சாலையை நீங்கள் பார்த்ததுண்டா? மக்களின் அடிப்படை தேவைகளை இவர் செய்ததுண்டா? எத்தனை முறை தேர்தலுக்கு பின்பு இவரை நீங்கள் நம் தொகுதியில் பார்திதிருக்கிறீர்கள்? உங்கள் பகுதிக்கு வந்து அங்கு (நடந்த?) பணிகளை பார்க்கவோ அல்லது நம் குறைகளை கேட்கவோ வந்ததுண்டா?

எங்கள் பகுதிக்கு (பத்மநேரி-கேசவநேரி) வந்தபோது நாங்கள் வைத்த எங்கள் பகுதியின் நீண்டகால கோரிக்கையான ஆற்றின் கரையை கட்டும் கோரிக்கைக்கு இவர் இதுவரை செவிசாய்க்கவில்லை. ஆகவே நண்பர்களே! வாக்காளர்களே இவர் இத்தொகுதியில் மீண்டும் போட்டியிட்டாலோ அல்லது வேறு தொகுதியில் போட்டியிட்டாலும் மீண்டும் இதே நிலைமைத்தான்.

அவ்வாறு மீண்டும் அவர் வந்தால் தொகுதி மக்களுக்காக, தொகுதி மக்களின் நீண்ட நாள் கோரிக்கையான வசந்த் நியூஸ் என்ற பெயரில் ஒரு டி.வி சேனல் தொடங்குவார் மேலும் மக்களுக்கு காங்கிரஸ் கட்சியின் கரை பதித்த துண்டுக்குப் பதிலாக வேஷ்டியோ அல்லது சேலையோ வழங்குவார் என நினைக்கிறேன்.

உஷாரய்யா உஷாரு!!! Regards JAR kesavaneri,padmaneri.

நன்றி : செய்ததிகள் பாலைவனதூது,

நீங்களும் உங்கள்தொகுதி எம்.எல்.ஏ.​ பற்றி electionsurvey@thoothuonline.com என்ற மின்னஞ்சல் முகவரிக்கு எழுதுங்களேன்.

5 comments:

Anonymous said...

பதிவு அருமை ! நன்றிகள்

rajamelaiyur said...

Election commission put a case against him

KarthiK said...

Good Article,
Whoever writes this kind of article, Please do not use original names. remember, congress now is in DMK alliance

Anonymous said...

கோத்த ஷாவடிக்கனும் அவனைலாம்

vigi said...

கோத்த ஷாவடிக்கனும் அவனைலாம்