சட்டசபை தேர்தலுக்கான வேட்புமனு தாக்கல் துவங்க, இன்னும் நான்கு நாட்களே உள்ள நிலையில், அ.தி.மு.க., தி.மு.க., அணிகள், பலப்பரீட்சையில் ஈடுபட தயாராகி விட்டன. இன்றைய நிலவரப்படி, அ.தி.மு.க., 160 தொகுதிகளிலும், தி.மு.க., 120 தொகுதிகளிலும் போட்டியிடுவது உறுதியாகி உள்ளது.
2006ம் ஆண்டு தேர்தலில் போட்டியிட்டதை விட, 12 தொகுதிகளில் குறைவாக தி.மு.க., போட்டியிடுகிறது. அ.தி.மு.க., கூட்டணியில் இடம்பெற்றுள்ள, ம.தி.மு.க.,வுக்கு மட்டுமே இன்னும் தொகுதிப் பங்கீடு முடிவாகவில்லை.
அந்தக் கட்சிக்கு மிக சொற்ப எண்ணிக்கையில், வெறும் எட்டு தொகுதி ஒதுக்க, அ.தி.மு.க., முன்வருவதால், கூட்டணியில் அக்கட்சி இருக்குமா என்ற சந்தேகம் ஏற்பட்டுள்ளது. கடந்த முறை, 188 தொகுதிகளில் போட்டியிட்டது. ம.தி.மு.க.,வுக்கு ஒரு வேளை அ.தி.மு.க., கூடுதல் தொகுதிகள் கொடுக்க முன் வந்தால், தன் பங்கில் இருந்துதான் கொடுக்க வேண்டியிருக்கும்.
சிந்திக்கவும்: இனி தமிழ் நாட்டில் திமுகவுக்கு அறுதி பெரும்பான்மை என்பது இல்லாமல் போச்சி. ஈழத்தமிழர் சாபம் கருணாநிதியை அரசியலில் இன்னும் படுகுழியில் தள்ளபோகுது. இந்த தேர்தலில் கருணாநிதியின் குடும்பக்கட்சி மண்ணை கவ்வும் என்பதில் சந்தேகம் இல்லை.
Subscribe to:
Post Comments (Atom)
1 comment:
தற்சமயம் தொகுதி உடன்பாடு முடிவு பெற்றது விவரம் இங்கு பார்க்கவும்
http://athiradenews.blogspot.com/2011/03/blog-post_15.html
Post a Comment