
இன்று மாலை அதிமுக பொதுச் செயலாளர் ஜெயலலிதாவை சரத்குமார் சந்தித்துப் பேசிய போது இந்த உடன்பாடு ஏற்பட்டது. இந்த 2 தொகுதிகள் எவை எவை என்பது குறித்து விரைவில் முடிவு செய்யப்படும் என்று சரத்குமார் அறிவித்துள்ளார். வரும் தமிழக சட்டமன்ற தேர்தலில் அதிமுக கூட்டணியில் தேமுதிக, மதிமுக மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி, இந்திய கம்யூனிஸ்ட் கட்சி, அகில இந்திய மூவேந்தர் முன்னேற்ற கழகம், மனிதநேய மக்கள் கட்சி, நாடாளும் மக்கள் கட்சி ஆகிய கட்சிகள் இடம் பெற்றுள்ளன.
இதன்மூலம் கூட்டணி கட்சிகளுக்கு அதிமுக இதுவரை 51 தொகுதிகளை ஒதுக்கிவிட்டது.
தேமுதிக 41, மனிதநேய மக்கள் கட்சி 3, சமத்துவ மக்கள் கட்சி 2, புதிய தமிழகம் 2, சேதுராமனின் மூவேந்தர் முன்னேற்றக் கழகம் 1, பார்வர்டு பிளாக் 1, இந்திய குடியரசுக் கட்சி 1 என கட்சிகளுக்கு இடங்கள் ஒதுக்கப்பட்டுவிட்டன. ஆனால், இவர்களுக்கு முன்பிருந்தே அதிமுக கூட்டணியில் உள்ள மதிமுக, இந்திய கம்யூனிஸ்ட் கட்சி, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிகளுக்கு இன்னும் தொகுதிகள் ஒதுக்கப்படவில்லை.
No comments:
Post a Comment