Mar 1, 2011

நீதித்துறையா? காவித்துறையா?

ஆமதாபாத், மார்ச்.1 : குஜராத் மாநிலம் கோத்ராவில் கடந்த 2002-ம் ஆண்டு பிப்ரவரி மாதம் 27-ந்தேதி சபர்மதி எக்ஸ்பிரஸ் ரெயில் தீ வைத்து எரிக்கப்பட்டது. இந்த சம்பவத்தில் அயோத்தி ராமர் கோவிலுக்கு சென்று விட்டு, குஜராத் திரும்பிக் கொண்டிருந்த 59 கரசேவர்கள் தீயில் கருகி செத்தனர்.ரெயில் எரிப்பு சம்ப வத்தைத் தொடர்ந்து குஜராத் மாநிலம் முழுவதும் பயங்கர மத கலவரம் வெடித்தது. 4 மாதம் நீடித்த இந்த கலவரத்தில் சுமார் 5000க்கும் அதிகமானோர் கொல்லப்பட்டனர்.

குற்றம் சாட்டப்பட்ட 94 பேரில் 63 பேர் நிரபராதிகள் என்று விடுவிக்கப்பட்டனர். முக்கிய குற்றவாளி என்று கூறப்பட்ட உமர்ஜியும் நிராபராதி என்று விடுதலை ஆனார். மீதமுள்ள 31 பேரும் குற்றவாளிகள் என்று அறிவிக்கப்பட்டனர். குற்றவாளிகள் 31 பேரில் 11 பேருக்கு தூக்கு தண்டனை விதித்து தீர்ப்பு கூறினார். மற்ற 20 பேருக்கு ஆயுள் தண்டனை விதித்து உத்தரவிட்டார்.

அரசு வக்கீல் இந்த தீர்ப்பை வரவேற்றார். குற்றவாளிகள் சார்பில் ஆஜரான வக்கீல் முகுல் சின்கா இந்த தீர்ப்பு அதிர்ச்சி அளிப்பதாக கூறினார். அவர் மேலும் கூறுகையில், கோத்ரா ரெயில் எரிப்பில் சதி குற்றச்சாட்டு நிரூபிக்கப்படவில்லை. அதற்கு ஆதாரமும் இல்லை. இந்த நிலையில் 11 பேருக்கு தூக்கு தண்டனை விதித்து இருப்பது கடும் அதிர்ச்சி அளிக்கிறது. இந்த தண்டனை அளவுக்கு அதிமானது. நியாயமற்றது என்றார்.

சிந்திக்கவும்: பாபர் முசூதியை இடித்துவிட்டு கலவரம் நடத்தி முஸ்லிம்களை கொன்று குவித்தவ அத்வானி, முதல் நரேந்திர மோடிவரை வெளியே. கோத்ரா ரயில் எரிப்பில் கொல்லப்பட்டது 59 பேர் அதை விபத்து என்று கமிசன் ரிப்போர்ட் சொல்கிறது. கரசேவை காரர்கள் ரயிலின் உள்ளே இருந்து கேஸ் மற்றும் அடுப்புகளை வைத்து சமையல் செய்ததில் நடந்த விபத்தாக இருக்கலாம் என்று கமிசன் சொல்கிறது. இப்படி ஒரு சந்தேகமான நிலையில் உள்ள ஒரு வழக்கை விரைந்து நடத்தி 11 பேருக்கு தூக்கு தண்டனை தீர்ப்பு. . எந்த ஆதாரமும் இல்லாத அநீத தீர்ப்பு. அதேவளை பாபர் மசூதியை இடித்துவிட்டு இந்தியா முழுவதும் கலவரம் நடத்தி முஸ்லிம்களை பல ஆயிரக்கணக்கில் கொன்று குவித்த ஹிந்து தீவிரவாதிகள் எல்லாம் சுதந்திரமாக நடமாடுகிறார்கள். அவர்களது வழக்கை இன்னும் முடிக்கவில்லை. 59 பேரை எரித்து கொன்றார்கள் என்றே வைத்துகொள்வோம் அவர்களுக்கு தூக்கு சரி! அதை காரணமாக வைத்து கலவரம் நடத்தி 5௦௦௦ க்கும் அதிகமான முஸ்லிம் மக்களை இரத்த வேட்டை ஆடிய மோடி கும்பலுக்கு என்ன தீர்ப்பு? இன்னும் அந்த மோடி முதலமைச்சரா இருக்கானே? இது நீதியின் தீர்ப்பு இல்லை! இது ஹிந்துவா ஆதரவு தீர்ப்பு! இது நீதி துறை இல்லை! ஹிந்துதுவாவின் படித்துறை!! /

3 comments:

Anonymous said...

கோத்ரா ரயில் எரிப்பு தீர்ப்பு நியாம்மற்றது ! வன்மையாஹா கண்டிக்கவேண்டியது !!
தமிழன்

tamilan said...

CLICK AND READ.

===>இந்துக்களே! விழிமின்! எழுமின்! .ஆபாசமே ஆயுதமா?. ஒரு சராசரி ஹிந்து இவற்றில் எதையுமே தெரியாமல் இருக்கின்றான்.அவன் உண்மையிலேயே வெட்கப்படுவான். வேதனைப்படுவான். தலைகுனிவான். அதிலிருந்து தப்பிக்க முயற்சிப்பான்.<===

.

murugesan said...

கடவுள் இல்லை என்பவன் கோவிலை இடிப்பதில்லை..
கடவுள் இருக்கிறான் என்பவன்தான் கோவிலை இடிக்கிறான்,பிற கடவுளை வணங்குபவர்களை கொலை செய்கிறான் ..