உலக கோப்பை கிரிக்கெட் போட்டி இதுவரை 9 முறை நடந்துள்ளது. இதில் இந்திய அணி ஒரே ஒரு முறை மட்டுமே உலக கோப்பையை பெற்றுள்ளது. 1983-ம் ஆண்டு கபில்தேவ் தலைமையிலான இந்திய அணி உலக கோப்பையை வென்று சகாப்தம் படைத்தது. அந்த அணியில் இடம் பெற்றவர்களில் ஒருவர் ரோஜர்பின்னி. இவர் சிறந்த ஆல்ரவுண்டர் ஆவார். 18 விக்கெட்டுகளை கைப்பற்றி இந்தியா உலக கோப்பையை வெல்ல முக்கிய காரணமாக இருந்தார்.
தற்போது நடைபெற இருக்கும் உலக கோப்பை போட்டி குறித்து ரோஜர் பின்னி கூறியதாவது:
இந்திய அணியில் ஷேவாக், யூசுப்பதான் துருப்பு சீட்டுகள் இருவரும் வெற்றியே தீர்மானிக்க கூடியவர்கள். இந்திய அணியில் அனுபவம் வாய்ந்த வீரர்கள் உள்ளனர். பல்வேறு சர்வதேச போட்டிகளில் விளையாடியவர்கள். இதனால் உலக கோப்பையை வெல்ல வாய்ப்பு உள்ளது. உள்ளூர் மைதானத்தில் ஆடுவது சாதகமானதே. அதே நேரத்தில் அணியில் இடதுகை சுழற்பந்து வீரர் இடம் பெற்று இருக்க வேண்டும்.
அப்படி இடம் பெற்று இருந்தால் இந்தியாவுக்கு அதிகமான வாய்ப்பு இருக்கும். இந்திய அணியின் பலமே பேட்டிங்தான். பேட்டிங் வரிசை பலமாக உள்ளது. பந்து வீச்சும் நன்றாக இருக்கிறது. 2-வது முறையாக இந்தியா உலக கோப்பையை வெல்ல வாய்ப்பு இருக்கிறது.
இவ்வாறு அவர் கூறினார். 1983-ம் ஆண்டு உலக கோப்பை போட்டியில் அதிக விக்கெட் கைப்பற்றியவர் ரோஜர் பின்னி என்பது குறிப்பிடத்தக்கது.
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment