புதுடெல்லி, பிப்.6: ரஷிய பெண்ணுடன் செக்ஸ் தொடர்பு எதிரொலியாக, இந்திய கடற்படை அதிகாரி ஒருவர் அதிரடியாக பணி நீக்கம் செய்யப்பட்டார். அந்த கடற்படை அதிகாரியின் பெயர், சுக்ஜிந்தர்சிங். கடந்த 2005 முதல் 2007- ம் ஆண்டு வரை அவர் ரஷிய தலைநகர் மாஸ்கோவில் இந்திய போர்க்கப்பல் தயாரிப்பு மேற்பார்வை அதிகாரியாக நியமிக்கப்பட்டு இருந்தார். அப்போது அறிமுகம் ஆன ரஷிய பெண் ஒருவருடன் சுக்ஜிந்தர் சிங்குக்கு செக்ஸ் தொடர்பு ஏற்பட்டது. அதை அப்பட்டமாக வெளிப்படுத்தும் புகைப்படங்கள், கடந்த ஏப்ரல் மாதம் வெளியானது. அதைத் தொடர்ந்து அவர் மீது விசாரணை நடத்த கடற்படை தளபதி உத்தரவிட்டார்.
விசாரணையில் அந்த பெண்ணுடன் சுக்ஜிந்தர்சிங்குக்கு இருந்த செக்ஸ் தொடர்பு நிரூபிக்கப்பட்டது. என்றாலும், இந்த தொடர்பினால், இரு நாடுகளுக்கு இடையே ஏற்பட்ட ராணுவ ஒப்பந்தங்களில் பாதிப்பு எதுவும் ஏற்படவில்லை என்றும் தெரிய வந்தது. அந்த விசாரணை அறிக்கையை பரிசீலித்த ராணுவ அமைச்சகம், செக்ஸ் குற்றச்சாட்டு நிரூபிக்கப்பட்ட கடற்படை அதிகாரி சுக்ஜிந்தர் சிங்கை நீக்கி உத்தரவிட்டது. ராணுவ மந்திரி ஏ.கே.அந்தோணி இந்த தகவலை நேற்று டெல்லியில் வெளியிட்டார். அந்த அதிகாரி ஓய்வு பெறுவதற்கு இன்னும் 2 ஆண்டுகள் உள்ள நிலையில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டு உள்ளது.
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment