லண்டன், பிப்.5-இங்கிலாந்தில் உள்ள ஜெட் விமான போக்குவரத்து நிறுவனம் ஒரு போர் விமானத்தை “இபே” ஆன் லைன் வர்த்தக நிறுவனம் மூலம் ஏல விற்பனைக்கு வைத்திருந்தது. இந்த விமானத்தை 7 வயது குறும்புக்கார சிறுவன் ரூ.50 லட்சத்துக்கு விலைக்கு வாங்கினான். இதை அறிந்த அவனது தந்தை அதிர்ச்சி அடைந்தார். ஏனெனில் அந்த விமானத்தை வாங்கும் அளவு அவரிடம் பணம் இல்லை. எனவே “இபே” ஆன் லைன் வர்த்தக நிறுவனத்தை அவர் அணுகினார்.
எனது மகன் விளையாட்டாக அதை விலைக்கு வாங்கிவிட்டான். ஆனால் இதை வாங்கும் அளவு அவனிடம் “பாக்கெட் மணி” (பணம்) இல்லை. மேலும் என்னிடமும் பணம் இல்லை. எனவே அவனை மன்னித்து விடுங்கள் என்று தெரிவித்தார். அவரது நிலைமையை புரிந்து கொண்ட அந்த வர்த்தக நிறுவனம் இதை பெரிதாக எடுத்துக் கொள்ளாமல் விட்டுவிட்டது. இதைத் தொடர்ந்து அந்த போர் விமானத்தின் ஏல விற்பனை தொடர்ந்து நடைபெறுகிறது.
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment