Feb 5, 2011
எகிப்தில் அதிபர் முபாரக் கட்சித் தலைவர் பதவியை விட்டு விலகினார்!!
கெய்ரோ, பிப்.5: எகிப்து அதிபர் பதவியில் இருந்து ஹோஸ்னி முபாரக் பதவி விலக வேண்டும் என்று கோரி அந்த நாட்டில் நடைபெற்று வரும் போராட்டம் நாளுக்கு நாள் தீவிரம் அடைந்து வருகிறது. ஆனால் அவர் பதவி விலக மறுத்து வருகிறார். அதிபர் முபாரக், ஆளும் தேசிய ஜனநாயக கட்சியின் தலைவராகவும் இருந்து வந்தார். இன்று திடீரென்று கட்சி தலைவர் பதவியில் இருந்து அவர் விலகினார். அக்கட்சியில் முக்கிய பொறுப்பு வகித்து வந்த அவரது மகன் காமல் முபாரக்கும் பதவியை ராஜினாமா செய்தார். எதிர்ப்பாளர்களை சமாதானப்படுத்தும் வகையில் அவர்கள் பதவி விலகியதாக கூறப்படுகிறது. இந்நிலையில் எகிப்து நாட்டில் நிலவி வரும் சூழ்நிலையை முடிவுக்கு கொண்டு வரவும், அங்கு அமைதியை நிலை நாட்டவும் உலக தலைவர்கள் முன்வர வேண்டும் என்று அமெரிக்க அதிபர் ஒபாமா அழைப்பு விடுத்துள்ளார்.
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment