Feb 3, 2011

பெண்துணை இல்லாமல்!! ஒரு ஆணால்!! தனித்து வாழ முடியுமா???


உங்கள் அறிவை அடகு வைக்கும் மூன்று காரியங்களில் பெண்கள் கவனமாக இருக்க வேண்டும். ஒன்று மாந்திரிகம் பில்லி சூனியம், பேய், பிசாசு, இவைகளை சரி செய்கிறேன் பேர்வழி என்ற பெயரில் நடமாடும் மாந்திரவாதிகள். இரண்டாவது எதிர்காலத்தை சொல்கிறேன், நல்லது, கெட்டதை கணித்து உங்களது வாழ்க்கையை வளபடுத்துகிறேன் என்று கூறும் ஜோதிடர்கள், நாடி ஜோதிடம் முதல் பல்வேறு ஜோதிடம் வரை. மூன்றாவது சாமியார்கள் கடவுளின் பக்கம் உங்களை நேருக்குகிறேன், உங்கள் பிரச்சனைகளை கடவுளிடம் பேசி தீர்க்க உதவுகிறேன், மத போதனைகளை கற்று தருகிறேன் என்று சொல்லும் இது போன்ற நபர்களிண்டம் தான் நம் அறிவை அடகு வைக்கிறோம். இவர்கள் உங்களது பலவீனம் என்ன என்பதை உங்களிடம் பேசி தெரிந்து கொண்டு அதற்க்கு தகுந்தா போல் உங்கள் மூளையை வாஸ் செய்கிறார்கள். எனவே பெண்கள் இது போன்ற விசயத்தில் கவனமாக இருக்கவேண்டும்.

உழைத்து சம்பாதிக்காத காஞ்சி சங்கராச்சாரியார் முதல் நித்யானந்தா சாமிகள் வரை இவர்கள் எல்லாரிடமும் மண் ஆசை, பொன் ஆசை, பெண் ஆசை, எல்லாம் கொட்டி கிடைக்கும். யார் உழைத்து சம்பாதிகிறார்களோ அந்த மக்களிடம் இது போன்ற சிந்தனைகள், செயல்கள், வக்கிரங்கள் வராது. உடல் உழைப்பு இல்லாமல் ஓசியில் மக்கள் கொடுக்கும் செல்வத்தை வைத்து வாழ்க்கை நடத்துபவர்கள் இது மாதிரிதான் செயல்படுவார்கள். இவர்களுக்கு என்ன பொண்டாட்டியா? பிள்ளைகளா? உறவினர்களா? நண்பர்களா? இவர்களுக்கு ஏதாவது சமூக பிரச்சனைகளா? பொருளாதார பிரச்சனைகளா? அரசியல் பிரச்சனைகளா? இவர்களுக்கு ஒன்றும் இல்லை. மக்களை ஏமாற்றி சம்பாதித்து சொகுசாக வாழவேண்டும் அவ்வளவு தான்.

எனவே இதுபோன்ற சாமியார்கள், ஜோதிடர்கள், குருக்கள், மந்திரவாதிகள் போன்றவர்களிடம் பெண்களே கவனமாக இருங்கள். ஆண்கள் பணத்தை மட்டும்தான் இழக்கிறார்கள் நீங்கள் கற்பையும் சேர்ந்து இழக்கவேண்டி வருகிறது. காஞ்சி சங்கராசாரி முதல் நித்யானந்தாவரை எல்லாம் போலிகளே. எதில் யாரும் விதிவிலக்கல்ல! எல்லா சாமியார்களும் பொய்களை சொல்லி மக்களை ஏமாற்றுபவர்கள்தான் இதில் எந்த மாற்று கருத்தும் இல்லை.சன்யாசிகள் என்று சொல்லிகொள்ளும் எல்லாரும் அறிவியல் ரீதியாக பெய்யர்களே. மனிதனாக பிறந்த எவனும் பெண்துணை இல்லாமல் வாழ்வேன் என்று சொன்னால் அவன் ஒன்று ஆண்மை இல்லாதவனாக இருக்கவேண்டும்!! ஏதாவது பேரும் நோய் இருக்கவேண்டும்!! இல்லை இதுபோல் எமாற்றுபவனாக இருக்கவேண்டும். பெண்களே கவனம்! கவனம்! கவனம்!

அன்புடன் ஆசிரியர் சிந்திக்கவும்.

2 comments:

Unknown said...

உடல் உழைப்பு இல்லாமல் ஓசியில் மக்கள் கொடுக்கும் செல்வத்தை வைத்து வாழ்க்கை நடத்துபவர்கள் இது மாதிரிதான் செயல்படுவார்கள்//

உடல் உழைப்புதான் உழைப்பு என்று இல்லை. அப்படிப்பார்த்தால் கலெக்டர் உழைக்காதவர்,மண்வெட்டுபவர் உயர்ந்தவர் ஆகிவிடுவார். என்றாலும் பெண்கள் சாமியாரிடம் போகாமல் இருப்பது இருவருக்கும் நல்லது. பெண்கள் தவறு நேர்ந்தவுடன் வெளிப்படுத்த தயங்குவதுதான் எல்லாவற்றிற்க்கும் காரணம். வேண்டுமென்றால் சாமியை நம்புங்கள் சாமியாரை அல்ல.

காதர் அலி said...

உண்மையயை உரைத்து சொன்னதற்கு நன்றி .