Feb 12, 2011

காப்பியடிப்பது பரிட்சையில் தொடங்கி ஐ.நா. வரை!!

ஐ.நா. பாதுகாப்பு சபை கருத்தரங்கில் கலந்து கொண்ட இந்திய வெளியுறவு துறை அமைச்சர் எஸ்.எம்.கிருஷ்ணா, கடந்த 11ஆம் தேதி உரையாற்றினார். அவர் ஆற்றிய உரை, போர்ச்சுக்கல் நாட்டின் வெளியுறவு அமைச்சரின் உரையாகும். முதலில் சில பாராக்கள், ஐ.நா.பாதுகாப்பு சபை தொடர்புடைய பொதுவான அம்சங்கள் இடம் பெற்று இருந்ததால், தவறான உரை என்பதை அவராலோ, அல்லது அருகில் இருந்த இந்திய அதிகாரிகளாலோ உடனடியாக உணர முடியவில்லை. கருத்தரங்கில் பங்கேற்ற இந்திய அதிகாரிகள் திகைத்தனர். அருகில் இருந்த ஐ.நா.வுக்கான இந்திய தூதர் ஹர்தீப்சிங் பூரி தவறை கண்டுபிடித்து, எஸ்.எம். கிருஷ்ணாவிடம் சுட்டிக்காட்டினார். அதைத்தொடர்ந்து ஏறத்தாழ 3 நிமிடங்களுக்குப்பிறகு சரியான உரையை எஸ்.எம்.கிருஷ்ணா வாசிக்க தொடங்கினார்.

No comments: