Feb 10, 2011
பார்பனம் & ஹிந்துத்துவா பயங்கரவாதம்: இந்தியாவின் சாபக்கேடு!!
1) பாபர் மசூதி இடிப்பு, மாலேகாவ்ன் குண்டு வெடிப்பு, காஞ்சி வரதராஜப் பெருமாள் கோயில் மேலாளர் சங்கரராமன் கொலைவழக்கு இம் மூன்று வழக்குகளின் சம்பந்தப்பட்ட குற்றவாளிகள் யார்? யார்? என்ற எண்ணம் பொது மக்களின் அடி மனத்திலே பதிந்து விட்டவையே. இருந்தாலும் பாபர் மசூதி தீர்ப்பு ஹிந்த்துதுவா (கட்டபஞ்சாயத்து) தீர்ப்பாக மாறி போனது. பாபர் மசூதி இடிப்புக் குற்றவாளிகள் 49 பேர் வெளியில் சுதந்திரமாகத் திரிகிறார்கள். இவ்வளவுக்கும் வீடியோ சாட்சியங்கள் கூட வெளிப்படையாக இருக்கின்றன, குற்றங்களோ சாதாரணமானவையல்ல. கலகம் விளைவித்தல் (இபிகோ (147), குரோத உணர்வைத் தூண்டுதல் (153ஏ) சட்ட விரோதமாகக் கூடுதல் (149) தேசிய ஒருமைப்பாட்டுக்குக் குந்தகம் விளைவித்தல், ஒரு சமுதாயத்துக்கு விரோதமாகக் குற்றம் செய்யத் தூண்டுதல் பா.ஜ.க., சங்பரிவார் பெருந் தலைவர்களின்மீது இவ்வளவு பெரிய குற்றச்சாற்றுகள் இருந்தும் இன்றுவரை எந்த நடவடிக்கையும் இல்லை.
2) காஞ்சி வரதராஜப் பெருமாள் கோயில் மேலாளர் சங்கரராமன் கொலைவழக்கு,: இதில் முக்கிய குற்றவாளிகள் காஞ்சிபுரம் சங்கராச்சாரியார்கள் ஜெயேந்திர சரஸ்வதி, விஜயேந்திர சரஸ்வதி ஆகிய இருவரும் உள்பட மொத்தம் 24 பேர்கள்மீது வழக்கு. காஞ்சி காமகோடி சங்கராச்சாரியார் வழக்கில் சாட்சிகள் எல்லாம் விலைக்கு வாங்கபட்டும், மிரட்டப்பட்டும் காம சாமியார் கொலைகார ஹிந்த்துதுவா சங்கராச்சாரியாருக்கு சாதகமாக போய்கொண்டு இருக்கு. வழக்குகளோ சாதாரணமானவையல்ல கொலை, கொலை செய்யத் தூண்டுதல் (இபிகோ 302) கூட்டுச் சதி (120பி) பொய்யான சாட்சிகளைச் சமர்ப்பித்தல் (34) கொலை (201).
3) மாலேகவ்ன் குண்டுவெடிப்பு வழக்கு!: மகாராட்டிர மாநிலம் மாலேகான் குண்டு வெடிப்பு! (29.9.2008) 5 பேர் பலி, 90 பேர் படுகாயம் மோட்டர் பைக்கில் டைமர் கருவி பொருத்தப்பட்டு வெடிகுண்டு வெடிக்கச் செய்யப்பட்ட சதி! அந்த மோட்டர் பைக்குக்குச் சொந்தக்காரர் பெண் சாமியார் சாத்வி பிரக்யா தாக்கூர் என்பவர் மாணவப் பருவந்தொட்டு ஆர்.எஸ்.எஸில் தொடர்பு கொண்டவர் மத்தியப் பிரதேசத்தைச் சேர்ந்த இவர் குஜராத் முதல் அமைச்சர் மோடியின் அன்புக்குப் பாத்திரமானவர் ஆதலால் குஜராத்தில் சூரத்தில் குடியேறியவர். இதில் மிக முக்கிய குற்றவாளி கர்னல் ஸ்ரீகாந்த் புரோஹித் - இராணுவத்தில் புலனாய்வுத்துறையில் பணி புரிந்தவர். பயிரை மேய்ந்த வேலி இவர். மலோகன் குண்டுவெடிப்புகள் மட்டும் ஏதோ கண்துடைப்பாக நடத்தபடுகிறது. குண்டு வெடிப்புகளை நடத்த முக்கிய பின்னணியாக இருந்து செயல்பட்ட ஆர்.எஸ்.எஸ். பயங்கரவாத அமைப்பு இன்னும் தடை செய்யபடாமையும், குஜராத் கலவர நாயகன் மோடி இன்னும் தண்டிக்கபடாமையும், இந்திய நீதி துறையிலும், உளவு துறையிலும் காவி பயங்கரவாதிகள் உடுருவி விட்டார்கள் என்பதையே காட்டுகிறது.
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment