சென்னை: ஸ்பெக்ட்ரம் ஊழல் தொடர்பாக முன்னாள் மத்திய தொலைத் தொடர்புத்துறை அமைச்சர் ராசா கைது செய்யப்பட்டதைப் போல, இந்த வழக்கில் முதல்வர் கருணாநிதியையும் கைது செய்ய வேண்டும். ஸ்பெக்ட்ரம் ஊழலால் ரூ.1.76 லட்சம் கோடி வரை நாட்டுக்கு இழப்பு ஏற்பட்டிருக்கிறது. ஆனால், ராசாவுக்குப் பிறக தகவல் தொழில்நுட்பத்துறை அமைச்சராகப் பொறுப்பேற்ற கபில் சிபல் எந்த இழப்பும் ஏற்படவில்லை என்றார். இப்போது மத்திய அரசின் மற்றொரு அங்கமான சிபிஐ ராசாவை கைது செய்திருக்கிறது. எந்த இழப்பும் ஏற்படவில்லை என்றால் ராசாவை ஏன் கைது செய்ய வேண்டும்?.அத்தோடு இந்த பிரச்சனை பாரதிய ஜனதா கட்சி ஆட்சி செய்யும் போது இருந்து தொடங்குகிறது. அவர்கள்தான் இந்த ஊழலில் முக்கிய வூற்று கண் எனவே அவர்களும் இதில் கைது செய்யப்பட வேண்டும். ஒரு முழுமையான விசாரணை தேவை? வெறும் கண்துடைப்பாக எய்தவன் இருக்க அம்பை கைது பண்ணுவது எந்த பிரோஜனத்தையும் ஏற்படுத்தாது. இந்த வழக்கில் கருணாநிதியையும், நிரா ராடியாவிடம் தொலைபேசியில் பேசிய கனிமொழி, ராசாத்தி அம்மாள் உள்ளிட்ட கருணாநிதியின் குடும்ப உறுப்பினர்களையும் கைது செய்ய வேண்டும். ஏன் இதில் பயன் அடைந்த தரகு வியாபாரிகள் முதல் இதை எடுத்து ஆதாயம் அடைந்த பணமுதலைகள் வரை ஏன் ஒரு தெளிவான நடவடிக்கை இல்லை. இது ஒரு பாரபட்சமான விசாரணை தானே தவிர வேறு இல்லை.
ஆசிரியர்: சிந்திக்கவும்.நெட்
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment