Feb 2, 2011

இந்திய அரசியல் சூழல் கேவலமானதாக இருக்கிறது!! சீமான்!!

இந்திய அரசியல் சூழல் கேவலமாக இருக்கிறது. இலவசங்களை கொடுத்து வாக்குகளை பறிக்கும் நிலைதான் இங்கு உள்ளது. எந்த பிரச்சனைக்கும் நிரந்தர தீர்வு என்பது இல்லை. காவிரி பிரச்சனை, முல்லை பெரியாறு பிரச்சனை, மீனவர் பிரச்சனைகளூக்கு நிரந்தர தீர்வு காணும் முயற்சியும் இல்லை. அதற்கு அரசியல் தீர்வு காண வேண்டும் என்பதற்காகத்தான் விடியல் பிரச்சாரத்தை தொடங்கியிருக்கிறோம். புரட்சிகளை ஏற்படுத்த வேண்டும். மீனவர்கள் சமீபகாலமாளாக தொடர்ந்து தாக்கப்பட்டுவருகிறார்கள். தேர்தல் காலம் நெருங்கிவிட்டதால் அவர்களுக்கான நிவாரணம் 5 லட்சமாக உயர்ந்துவிட்டது. செல்லப்பன் என்ற மீனவர் கொல்லப்பட்டபோது 3 லட்சமாக இருந்த நிவாரணம் பாண்டியன், ஜெயக்குமார் ஆகியோர் கொல்லப்பட்டபோது தேர்தலை கருதி 5 லட்சமாக உயர்த்தப் பட்டுள்ளது. இனிமேலும் மீனவர்கள் கொல்லப்பட்டால் அவர்களுக்கான நிவாரணம் இன்னும் உயர்த்தப்படலாம். இப்போது நிருபமாராவ் இலங்கை சென்று வந்திருக்கிறார். கொலைக்காரன் ராஜபக்சேவை சந்தித்துவிட்டு வந்திருக்கிறார். அடுத்து பிரதமர் மன்மோகன்சிங் கூட சென்று வர வாய்புள்ளது. இது எல்லாமே தேர்தலுக்கான கண்துடைப்ப்புதான்’’ என்று கூறினார்.

1 comment:

Unknown said...

உண்மை சுடுமுங்க!