கனடாவை ஒட்டியுள்ள எல்லைப்புறங்களில் அமெரிக்கா எல்லைகள் 1:100 மைல்களுக்கும் குறைவான அளவே பாதுகாக்கப்பட்டிருப்பதாக, அரசின் கண்காணி்ப்பு புலனாய்வு அமைப்பு ஒன்று கூறியுள்ளது. அமெரிக்க அரசின் அலுவலகத்தின் கூற்றுப்படி, சென்ற ஆண்டில் 4000 மைல் கொண்ட வடக்கு புற எல்லைபகுதியில் வெறும் 32 மைல் எல்லைப்பகுதி மட்டுமே பாதுகாப்பு பெற்றுள்ளதாக எல்லைப்புற ரோந்து அமைப்பின் ஆய்வறிக்கையில் வெளியிடப்பட்டுள்ளது.
மெக்சிகோவின் போதை மருந்து லாபியின் வன்முறைகள், சட்டத்திற்கு புறம்பாக குடியேறுபவர்களைக் கட்டுப்படுத்தவும், மெக்சிகோவுடனான 2000 மைல் தென்மேற்கு எல்லைகளில் பாதுகாப்பு ஏற்பாடுகளை பலப்படுத்த ஒபாமா அரசு கடும் அழுத்தத்தை எதிர்கொண்டுள்ளது.ஆயினும் வடக்கு எல்லைப்பகுதியே போதை மருந்து, பணப்பறிமாற்றம், ஆயுதக் கடத்தல் மற்றும் ஆட் கடத்தல் செயல்படும் இடம் என்றும் கூறியுள்ளது. இதற்கு காரணம் அதன் மிக நீண்ட எல்லைப்பகுதிக்கான குறைவான பாதுகாப்பு நடவடிக்கைகளே என ஆய்வறிக்கை கூறுகிறது.
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment