Feb 8, 2011

எலியும் & பூனையும் பேச்சுவார்த்தை!! ஒற்றுமையானால் சந்தோசம்!!

திம்பு, பிப்.8- இந்தியா-பாகிஸ்தான் இடையே உள்ள முக்கியப் பிரச்னைகளை தீர்க்க தொடர்ந்து பேச்சுவார்த்தை நடத்த இருநாடுகளும் முடிவு செய்துள்ளன. இத்தகவலை திம்புவில் இந்திய வெளியுறவுத்துறைச் செயலர் நிருபமா ராவ் செய்தியாளர்களிடம் தெரிவித்தார். பாகிஸ்தான் வெளியுறவுத்துறைச் செயலர் சல்மான் பஷீரை அவர் இன்று சந்தித்துப் பேசினார்.

இந்த ஆண்டு இறுதியில் பாகிஸ்தான் வெளியுறவு அமைச்சர் ஷா மஹ்மூத் குரேஷி இந்தியா வரவுள்ளதாகவும், அதற்கு முன்னதாக இருதரப்பு அதிகாரிகளிடையே தொடர்ந்து பல பேச்சுவார்த்தைகள் நடைபெறும் என்றும் அவர் கூறினார். காஷ்மீர் விவகாரம், சியாச்சின் நிலவரம் உள்ளிட்ட பல பிரச்னைகள் குறித்து இந்த தொடர் பேச்சுவார்த்தைகளில் ஆலோசி்க்கப்படும் என்றார் நிருபமா ராவ். பரஸ்பர நம்பிக்கை குறைபாட்டை சரிசெய்வது மற்றும் மீண்டும் பேச்சுவார்த்தை முறியாமல் தடுப்பது ஆகியவற்றில் இருநாடுகளும் கவனம் செலுத்தும் என்றும் அவர் தெரிவித்தார்.

No comments: