Feb 1, 2011

மனிதன் பாதி! மிருகம் பாதி! கலந்து செய்த கலவை நாங்கள்!!!

ஓடும் வாகனத்துக்குள் வைத்து இளம் யுவதி ஒருவர் மாறி மாறி நான்கு பேரால் கற்பழிக்கப்பட்ட கொடூரம் உத்தர பிரேதேச மாநிலத்தில் நடந்துள்ளது. நான்கு குண்டர்களில் ஒருவர் உத்தர பிரதேச அமைச்சர் ஒருவரின் நெருங்கிய உறவினர். இன்னொருவர் மோதிங்கார் நகரத்தைச் சேர்ந்த பிரபல வைத்தியர் ஒருவரின் மகன். ஏனைய இருவரும் வீடு, காணி விற்பனை முகவர்களில் புதல்வர்கள். யுவதிக்கு வயது 25 திருமணம் ஆனவர். வறிய குடும்பத்தை சேர்ந்தவர். தொழில் தேடி அலைந்து திரிந்து இருக்கின்றார்.

இவரை மேற்சொன நால்வரும் சந்திக்க நேர்ந்தது. தொழில் பெற்றுத் தருவார்கள் என்று வாக்குறுதி வழங்கினர். நம்ப வைத்தனர். வாகனத்தில் ஏற்றிச் சென்றனர். இவர்களில் ஒருவர் பாதி வழியில் கைத்துப்பாக்கியை காட்டி யுவதியை மிரட்டினார். ஒருவர் பின் ஒருவர் மாறி மாறி கற்பழித்தனர். மாலை 2.00 மணிக்கும் மாலை 4.00 மணிக்கும் இடையில் இக்கற்பழிப்பு இடம்பெற்று உள்ளது. மாறி மாறி கற்பழித்து விட்டு யுவதியை ஓரிடத்தில் இறக்கி விட்டனர். எவரிடமும் கற்பழிப்புச் சம்பவத்தை சொல்லக் கூடாது என்றும் சொன்னால் உயிர் உடலில் தங்காது என்றும் கடுந்தொனியில் எச்சரித்து விட்டுச் சென்றனர்.

No comments: