ஜோகூர்பாரு: ஜோகூர் பகுதியில் ஏற்பட்ட பெரு வெள்ளம் காரணமா 50, 000 மக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டு உள்ளனார். வான¬லைத் துறை வெளியிட்டுள்ள செய்தியில் இந்த வாரம் முழுவதும் நாட்டின் பல பஹுதில் மழை நீடிக்கும் என்றும், வார இறுதியில் மழையின் தாக்கம் குறையும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. பெரும் வெள்ளத்தின் காரணமாக ஜோகூர் பகுதியில் 39, 500 மக்களும், நெகிரி செம்பிலான் பகுதியில் 2,200 மக்களும், மலாக்கா பகுதியில் 1,200 மக்களும், பாகாங் பகுதியிலிருந்து 500 மக்களும் இதுவரை வெளியேற்றப் பட்டுள்ளனர்.
2006 மற்றும் 2007ம் ஆண்டுகளில் ஏற்ப்பட்ட வரலாறு காணாத வெள்ளத்தைவிட இம்முறை ஏற்பட்டுள்ள வெள்ளம் அதிக சேதத்தை விளைவிக்கும் என்று அஞ்சப்படுகிறது. மாநிலங்களில் ஓடும் முக்கிய ஆறுகளில் தண்ணீர் ஆபத்தான அளவை எட்டியுள்ளதாக தேசியப் பேரிடர் குழு தலைவர் ஹாணி தெரிவித்தார். செகாமட் பகுதியில் உள்ள 134 மின் துணை நிலையங்கள் அசம்பாவிதங்களை தவிர்க்கும் பொருட்டு முடப்பட்டுள்ளது.
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment