Feb 1, 2011
மூன்றாவது அணியா? ஒரே காமடியா இருக்கு!!
டில்லியில், காங்கிரஸ் தலைவர் சோனியாவிடம், முதல்வர் கருணாநிதி நடத்திய முதல்கட்ட பேச்சுவார்த்தையில் இழுபறி ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. இந்த பேச்சுவார்த்தையில் கூட்டணி பற்றி காங்கிரஸ் மேலிடம் உறுதி செய்யாததாலும், தமிழகத்தில் காங்கிரஸ் தலைமையில் மூன்றாவது அணி அமைய வேண்டும் என்ற கோரிக்கையை அக்கட்சி மேலிடம் பரிசீலனை செய்து வருவதாலும், தி.மு.க., - காங்கிரஸ் கூட்டணியில் பின்னடைவு ஏற்பட்டுள்ளது. நேற்று கருணாநிதி சோனியாவை சந்தித்தார். இந்த சந்திப்பின்போது ராகுல், அகமது படேல் ஆகியோரும் உடனிருந்தனர். அப்போது நடந்த தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தையின் போது, "காங்கிரசுக்கு 80 தொகுதிகள் ஒதுக்கப்பட வேண்டும். ஐந்து அமைச்சர் பதவிகள், துணை முதல்வர் பதவி தரப்பட வேண்டும்' என, ராகுலின் விருப்பத்தை சோனியா தெரிவித்ததாகவும், அதற்கு முதல்வர் எந்த பதிலும் கூறாமல் அமைதியாக இருந்தார். இதனால் கூட்டணியில் குழப்பம் ஏற்பட்டுள்ளது. தமிழகத்தில் காங்கிரஸ் தலைமையில் மூன்றாம் அணி உண்டாக்க திட்டமிடப்பட்டுள்ளது.
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment