Feb 1, 2011

இந்தியாவில் புதிய பயங்கரவாத இயக்கங்கள் தலைத்தூக்கியுள்ளன!! ப.சிதம்பரம்!!

புதுடெல்லி,பிப்:இந்தியாவில் புதிய பயங்கரவாத இயக்கங்கள் தலைத் தூக்கியுள்ளன என மத்திய உள்துறை அமைச்சர் ப.சிதம்பரம் தெரிவித்துள்ளார். இந்தியாவின் பல பகுதிகளில் நடந்த பயங்கரவாத தாக்குதல்களில் இவ்வமைப்புகளின் பங்கினைக் குறித்து சந்தேகிக்கப் படுவதாக அவர் கூறினார். மலேகான், சம்ஜோதா, மக்கா மஸ்ஜித், அஜ்மீர் உள்பட இந்தியாவின் பல்வேறு பகுதிகளில் நடந்த குண்டுவெடிப்புகளில் ஆர்.எஸ்.எஸ் உள்பட பல்வேறு ஹிந்துத்துவா பயங்கரவாத இயக்கங்களின் பங்கு வெட்ட வெளிச்சமான சூழலில் உள்நாட்டு பாதுகாப்பைக் குறித்து விவாதிக்க அழைக்கப்பட்ட மாநில முதல்வர்கள் கூட்டத்தில் உரைநிகழ்த்தினார் அவர். ஆர்.எஸ்.எஸ். பயங்கரவாத அமைப்பு பல்வேறு புது பெயர்களில் அமைப்புகளை துவங்கி செயல்படுத்தி வருவதாக சொன்னார்.

No comments: