சிறீலங்கா இராணுவத் தினருடனான இறுதிக்கட்ட யுத்தத்தின் போது வான்புலிகளும் தப்பித்துச் சென்றுள்ளதாக திவயின பத்திரிகையில் இன்று வெளியாகியுள்ள செய்தியொன்றில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இறுதிக்கட்ட யுத்தத்தின் போது தப்பிச் சென்ற ஏனைய விடுதலைப் புலி உறுப்பினர்கள் போன்று அவர்களில் சிலரும் தமிழ்நாட்டில் தஞ்சமடைந்திருப்பதாகவும் அந்தச் செய்தியில் குறிப்பிடப்பட்டுள்ளது.
இலங்கைப் புலனாய்வுத்துறையினரை மேற்கோள் காட்டி அந்தச் செய்தியில் மேலும் தெரிவிக்கப்பட்டிருப்பதாவது, தமிழ்நாட்டில் புதிதாக ஒருங்கிணையும் விடுதலைப் புலிகள் அமைப்பின் உறுப்பினர்கள் கடந்த டிசம்பர் மாதக் கடைசியில் தேவையான பயிற்சிகளை நிறைவு செய்துள்ளனர். அவர்கள் கேரளாவிலும் ஆயுதப் பயிற்சியைப் பெற்றுள்ளதுடன், அது தொடர்பான குறும்படமொன்றையும் தயாரித்துள்ளமை குறித்து இந்திய உள்ளகப் பாதுகாப்பு அமைச்சுக்குத் தகவல் கிடைத்துள்ளது. இந்தியாவில் விடுதலைப் புலிகளின் மீள் ஒருங்கிணைப்பு மற்றும் ஆயுதப் பயிற்சிகள் தொடர்பான பல திடுக்கிடும் தகவல்கள் இலங்கை இராணுவத்தினரால் கைது செய்யப்பட்டுள்ள முக்கிய புலி உறுப்பினர் ஒருவரிடமிருந்து கிடைக்கப்பெற்றுள்ளது.
Subscribe to:
Post Comments (Atom)
3 comments:
இது போன்ற செய்திகள் வெளியிடுவதில் ஒரு விஷமத்தன்மை உள்ளதாகவே எண்ணுகின்றேன். வணிக நோக்கில் வரும் இதழ்களில் வேண்டுமானால் விற்பனைக்காக பரபரப்பாக்குவார்கள். நம் வலைப்பூவில் வேண்டாமே! இதனையே மேற்கோள் காட்டி தமிழுணர்வாளர்களையும், இலங்கைத்தமிழர்களையும் சட்டரீதியாக வாட்டி வதைக்க முயல்வர் ஆளும் வர்க்கத்தினர். எக்கட்சி ஆட்சியில் இருந்தாலும் நிலை இதுவே!

உங்கள் கருத்துக்கு நன்றி. வாசகர்களே கருத்து சொல்லுங்கள் அப்பத்தான் எங்களுக்கும் உற்சாகமாக இருக்கும் அதே நேரம் தவறுகளை திருத்தி கொள்ள முடியும்.
Post a Comment